சிசிஎல்: துபாயில் மும்பை ஹீரோஸிடம் தோற்ற சென்னை ரைனோஸ்- விக்ராந்த், விஷ்ணு சூப்பர்
துபாய்: துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியிடம் சென்னை ரைனோஸ் அணி தோற்றது.
துபாயில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியான சிசிஎல் 23.02.2013 அன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெங்காள் டைகர்ஸ் ஒரு பிரிவிலும், சென்னை ரைனோஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் மற்றொரு பிரிவிலும் மோதின.
சென்னை ரைனோஸ் அணி நடிகர் விஷால் தலைமையில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. டாஸ் வென்ற மும்பை ஹீரோஸ் முதலில் பேட் செய்தது. அவர்கள் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தனர். ஜீவா 4 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்தார்.

சல்மான் கான்:
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை அணியை உற்சாகப்படுத்தினார். சென்னை அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா கான் அவுட் ஆனார்.

கணவர், மகள்களுடன் ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் வந்து போட்டியைக் கண்டுகளித்தார். விக்ராந்த் மற்றும் பிரித்வி ஆகியோர் ஜோடி சேர்ந்து 58 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பிரித்வி அவுட்டானார்.

சுனில் ஷெட்டி
பிரித்வி வெளியேறிய பிறகு வந்த விஷ்ணு விக்ராந்துடன் சேர்ந்து 70 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் விக்ராந்தை பெல்வானி அவுட் ஆக்கினார்.

விஷாலுடன் சுனில் ஷெட்டி
விக்ராந்த் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

விஷால், சுனில், சொஹைல்
சென்னை அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்ததில் அணி நிலைதடுமாறியது. இறுதியில் சென்னை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வேதிகாவுடன் சோனியா அகர்வால்
விஷ்ணு 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். விஷ்ணு அவுட் ஆன பிறகு சென்னை அணியின் பலம் குறைந்துவிட்டது.

போட்டியைப் பார்க்கும் நடிகைகள்
எஸ். அலுவாலியாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

அரங்கில் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்
திரை நட்சத்திரங்கள் ஆடிய ஆட்டைத்தைப் பார்க்க அரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

நள்ளிரவு வரை இருந்த ரசிகர்கள்
மாலை துவங்கிய போட்டி நள்ளிரவு வரை நீடித்தது. போட்டி முடியும் வரை ரசிகர்கள் இருந்து தங்களுக்கு பிடித்த அணியை உற்சாகப்படுத்தினர்.

ரசிகர்களுடன் சல்மான் கான் தம்பி சொஹைல்
சல்மான் கானின் தம்பியும், நடிகருமான சொஹைல் கான் ரசிகர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications