For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்ப்பிணிகள் வயாக்ரா சாப்பிடுவது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லதாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

செக்ஸ் உறவில் ஆண்கள் வலிமை யாக செயல்பட மட்டுமே பயன்படும் என்று கருதப்பட்டு வந்த வயாக்ரா மாத்திரை, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

வயக்ரா மாத்திரையானது, தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு தேவையான ரத்தத்தை அதிக அளவில் சப்ளை செய்கிறதாம்.

கர்ப்பகாலத்தில் வயக்ரா உட்கொண்டால் ஆரோக்கியமான, சரியான எடையுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி

கர்ப்பகாலத்தில் வயக்ரா மாத்திரையை உட்கொண்ட பெண்களுக்கு சரியான உடல் எடை கொண்ட குழந்தைகள் பிறந்தனவாம். 120 கர்ப்பிணிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில் இது கண்டறியப்பட்டது.

வயக்ரா மாத்திரை இங்கிலாந்தில் 1998 ஆம் ஆண்டு புழக்கத்தில் விடப்பட்டது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து நீடித்த இன்பத்தை அளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு பிளசென்டா மூலம் சரியான அளவில் ரத்தமானது கருக்குழந்தைக்கு கிடைக்கிறதாம். இதனால் குழந்தையின் வளர்ச்சியும் அதிகரிக்கிறதாம்.

600 குழந்தைகள்

600 குழந்தைகள்

இங்கிலாந்தில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் குறை வளர்ச்சியோடு பிறக்கின்றனவாம். இதற்கு காரணம் தாயிடம் இருந்து குழந்தைக்குத் தேவையான ரத்தம் கிடைக்காத கிடைக்காததுதான் என்று கண்டறிந்தனர்.

வயக்ராவின் உற்சாகம்

வயக்ராவின் உற்சாகம்

இதுபோன்ற குறைபாடு உடைய கர்ப்பிணிகளுக்கு வயக்ரா மாத்திரை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் தேவையான அளவு ரத்தம் குழந்தைக்கு கிடைத்தது.

கருவின் வளர்ச்சி

கருவின் வளர்ச்சி

இதே முறையைப் பயன்படுத்தி நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் கர்ப்பிணிகளுக்கு வயக்ரா மாத்திரையை கொடுத்து கருவின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக்கி வருகின்றனர்.

4000 குழந்தைகள்

4000 குழந்தைகள்

இங்கிலாந்தில் மட்டும் 4000 குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக பிறக்க வயக்ரா உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செக்ஸ் விசயத்தில் மட்டுமே உதவிய வயக்ரா, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கவும் உதவி வருவதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் வயக்ரா

இந்தியாவில் வயக்ரா

வயக்ரா மாத்திரை, மும்பையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணையும், அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் காப்பாற்றியுள்ளது. பூங்கொடி 24 வார கர்ப்பமாக இருந்தபோது, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சாதாரணமாக கொடுக்கப்படும் வழக்கமான மாத்திரைகளை கொடுக்காமல் வயாக்ரா மாத்திரை போன்று ஆண்மை சக்திக்கு கொடுக்கப்படும் ""சில்டெனபில்'' என்ற மாத்திரை கொடுக்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் அவருக்கு இருந்த உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து 29 வாரத்திலேயே அழகான பெண் குழந்தையை சிசேரியன் மூலம் பெற்றெடுத்தார் பூங்கொடி.

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

கர்ப்பிணிகளைத் தொடர்ந்து மார்பகப்புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் போன்ற நோய் சிகிச்சைகளுக்கும் வயக்ரா மாத்திரையை கொடுத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். 2017ம் ஆண்டு முதல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரிசோதனை முயற்சியில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

English summary
Study is underway to see if sex drug can boost survival of babies who are not growing the womb Previous studies found that Viagra could help babies thrive by boosting blood supply to the placenta Pregnant women could be given the anti-impotence drug Viagra to boost the growth of underweight babies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X