ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமானுக்கு அமெரிக்காவில் தமிழ் ரத்னா விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐ.நா.சபையில் இசை நிகழ்சி நடத்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு 'தமிழ் ரத்னா விருது' வழங்கி அமெரிக்க தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.

இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

இதில், ஐ.நா சபையில் கர்நாடக இசை கச்சேரி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் பாடும் 2வது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

rn

ஏ.ஆர். ரகுமானுக்கு புகழாரம்

நியூயார்க் சென்ற ஏ.ஆர்.ரஹ்மான், நியூயார்க்கில் உள்ளவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரியை ஒழுங்குபடுத்திவந்த பிரகாஷ் ஸ்வாமி ஏ.ஆர்.ரஹ்மானைப் புகழ்ந்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொன்னதற்கே, அவ்வளவு ஆச்சரியப்பட்டுவிட்டனர்.

இசைக்கலைஞர்கள்

இசைக்கலைஞர்கள்

ரகுமான் தனது ஆர் பவுண்டேசன் மூலமாக பல நல்ல காரியங்களைச் செய்துவருகிறார். இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசைக் கச்சேரி நடத்தவிருக்கும் சன்சைன் ஆர்கெஸ்ட்ராவில் இருக்கும் இளம் இசைக்கலைஞர்கள் அனைவரும் சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர்கள். இசையறிவு இருந்தும் இசைக்கருவிகளை தொட்டுக்கூடப் பார்க்காதவர்கள்.

ஓயாத கைத்தட்டல்

ஓயாத கைத்தட்டல்

அவர்களின் திறமைக்கு முகவரி அளிக்கும் விதத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்தச் செலவில் இசை, பள்ளி, கல்லூரிப் படிப்புகளின் செலவையும் ஏற்று, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து தன்னுடைய ஆர்கெஸ்ட்ரா டீமை உருவாக்கியிருக்கிறார் என்று, பிரகாஷ் ஸ்வாமி சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிய கைதட்டல் ஓய நீண்ட நேரம் பிடித்தது.

தமிழ் ரத்னா விருது

2 முறை ஆஸ்கர், 2 முறை கிராமி விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான் அமைதி, பணிவு, தொண்டின் உருவானவர் என்று புகழ்ந்து பேசினார்.இசைக் கச்சேரி முடிந்ததும், அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பாக 'தமிழ் ரத்னா விருது' வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

ரகுமானின் தன்னடக்கம்

ரகுமானின் தன்னடக்கம்

நியூயார்க் மண்ணில். கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற கான்ஃபரன்ஸில், தனது பேச்சின்மூலமே அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். முழுவதும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல்கள் அடங்கிய ஆல்பம் இதுவரை ரிலீஸ் செய்ததில்லையே ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு நான் முதலில் நல்ல பாடகனாக வரவேண்டும் என்று தன்னடக்கத்துடன் பதில் சொன்னார்,

இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை

இறையை புரிந்துகொள்வதில்தான் மேன்மை இருக்கிறது. நமது ஊக்கசக்தியின் கருப்பொருளாகவே மாறிவிடுவதுதான் இறைநிலை. அதற்கான வழியில் நம் எண்ணங்களை மாற்றும்போது அந்த உண்மை தெரியவரும் எனக் கூறினார். அமெரிக்க தமிழ் சங்கம் அளித்த கவுரவத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி கூறினார்.

அமெரிக்க தமிழர்களின் விருது

அமெரிக்க தமிழர்களின் விருது

இந்த தமிழ் ரத்னா விருது தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பரதநாட்டிய கலைஞர் கமலா லக்ஷ்மன், கணிதவியலாளர் ஸ்ரீனிவாச வரதன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வளவனூர் சுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oscar-winning music maestro A.R. Rahman has been honoured by the America Tamil Sangam with its Tamil Ratna Award.
Please Wait while comments are loading...