For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்வர்ட் பல்கலையில் நம்ம "தல".. மாணவர் சங்க தலைவரானார் ஸ்ருதி பழனியப்பன்

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக ஸ்ருதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவில் காம்பிரிட்ஜ் நகரில் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் படிப்பது என்றாலே தனி கெத்துதான்.

உலகில் எல்லோருமே இங்கு படிப்பதை பெருமைக்குரிய ஒரு விஷயமாகவே அன்றைய காலங்களிலிருந்தே கருதி வருகிறார்கள். அதனால் இங்கு படிப்பதற்கு போட்டா போட்டியே நடக்கும்!

 சென்னை பெண் ஸ்ருதி

சென்னை பெண் ஸ்ருதி

இந்த பல்கலைக் கழகத்தில் நம் மாநில பெண் ஸ்ருதி படித்து வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதாவது ஸ்ருதியின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டே சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறி விட்டவர்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

 41.5 சதவீதம் வாக்குகள்

41.5 சதவீதம் வாக்குகள்

இந்த இளங்கலை மாணவர்களின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அமைப்புதான் இளங்கலை கவுன்சில் என்பது. இந்த கவுன்சிலின் தலைவர் பதவிக்குதான் ஸ்ருதி போட்டியிட்டார். இறுதியில் 41.5 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றியும் பெற்றுவிட்டார்.

 வீடு போல மாற்றுவோம்

வீடு போல மாற்றுவோம்

மாணவர்களிடம் ஸ்ருதி என்ன சொல்லி வாக்கு கேட்டார் தெரியுமா? பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று சொன்னார். ஸ்ருதியின் இந்த வார்த்தை நிறைய பேருக்கு பிடித்துவிட்டது. அதனாலேயே பெரும்பாலானோர் ஸ்ருதிக்கு ஓட்டு போட்டார்கள்.

 20 வயது

20 வயது

உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஒரு குட்டி தலைவியாக வலம் வரும் 20 வயதான ஸ்ருதிக்கு இந்திய மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Chennai student Sruthi elected President of Harvard Student body in America
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X