• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைட்டு பைட்டாக் காதல்!

|

காதல் காதல் காதல்.

காதல் காதல் காதல்.

காதல் காதல் காதல்.

'காதல் எப்போதும் காதலாகத்தான் இருக்கிறது. இந்தக் காதலர்கள் தான் எப்போதும் காதலர்களாக இருப்பதில்லை.'

Love in bytes a mini series

கூட்டினாலும் பெருக்கினாலும் வகுத்தாலும் கழித்தாலும் ஏன் அடித்தாலும் உதைத்தாலும் வெட்டினாலும் கொளுத்தினாலும் கூட, இக்காதல் காதலாகத்தான் இருக்கும். இருந்திருக்கிறது. இனியும் இருக்கும்.

'காதலை சரிவரக் கொண்டாடத் தெரியாதவர்கள் இம்மனிதர்கள். அதனால் தான் காதலிங்கே காதலாகவும், மனிதரிங்கே மனிதராகவும் இல்லை.'

இப்பெரும் பிழையை அல்லது குறையைத் திருத்தத்தான் அல்லது போக்கத்தான் காதல் பற்றி காதலுக்குள் விழுந்து எழுந்து உருண்டு புரண்டு தவழ்ந்து எழுந்து நடந்து பறந்து உருகி மருகி அழுது தொழுது மகிழ்ந்து முகிழ்ந்து சிரித்து சிலிர்த்து எழுதவேண்டியுள்ளது.

Love in bytes a mini series

காதல் பற்றி எழுத நீங்கள் யார்? உங்களுக்கென்ன தகுதியுள்ளதெனக் கேட்கலாம். கேட்பின்,

காதலித்தேன். காதலிக்கிறேன். காதலிப்பேன். இதைவிட வேறென்ன தகுதி வேண்டுமென்பேன்.

'காதல் கற்றுத் தெரிவதல்ல;

பெற்றுத் தெளிவது!'

அதனால் காதல் பற்றி இங்கேதும் கற்றுத்தரப்போவதில்லை. அது வீண் செயல். ஆனால், காதல் குறித்து சிலவற்றை காலமும் இன்றையக் காதலில்லாக் காதல் கருதியும் சொல்லவேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது. அதன் பொருட்டே இந்த 'பைட்டு_பைட்டாக்_காதல்'.

இது காதலித்தவருக்கு,

காதலிப்போருக்கு,

காதலிக்கப்போவோருக்கென யாவருக்குமே.

காதலை வாழ்த்துவோம். வணங்குவோம். இன்றும் என்றும் என்றென்றும்.

வாழ்க காதல்!!!

Love in bytes a mini series

''பைட்டு_பைட்டாக்_காதல் - 1''

#0001 - ஆண்கள் காதலை சொல்லல் அழகெனில்.. பெண்கள் காதலை சொல்லல் பேரழகென்பேன்!!!

#0002 - நெஞ்சமெல்லாம் காதல் பூத்தொருத்தி எப்படி அவனிடமதைச் சொல்வதெனத் தெரியாமல் தவித்தலும் தவித்தல் நிமித்தமுமான சுழலில் சிக்கி உழல்வதும் வெட்கமுறுதலும் சிரித்தலும் அழகிலும் அழகது பேரழகடியம்மா.

#0003 - காதல் என்னும் இரு சக்கரப் பயணத்தில் ஊடலும் கூடலும் இரண்டு சக்கரங்கள். ஒன்று குறைந்தாலும் பயணம் தொடராது. அப்படியேத் தொடர்ந்தாலும் அது சிறக்காது. ஆதலால் என்னருமைக் காதலர்களே ஊடலிருந்து கூடலும் கூடலிருந்து ஊடலும் நித்தம் நித்தம் படியுங்கள். படையுங்கள். வாழ்க்கை தேனாய்ச் சொட்டச் சொட்ட இனிக்கட்டும்.

#0004 - இழப்பதில் பெறுவதும் -

பெறுவதில் இழப்பதும் தான் -

காதல்!

#0005 - காதல் என்பது அத்துனை அழகானது, ஆர்ப்பாட்டமானது, ஆனந்தமானது, அளப்பரியது. அதே சமயம் சற்று துயரானது, வலியானது, இன்னலானது, இம்சையானது. அத்துடன் கொஞ்சமே கொஞ்சம் காயமும் கண்ணீரும் நிறைந்தது.

Love in bytes a mini series

#0006 - ரசிக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அழகனெனில்.. ரசிக்கத் தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் பேரழகிதான்.

இதை இப்படியும் சொல்லலாம்.. காதலிக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அழகனெனில்.. காதலிக்கத் தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் பேரழகிதான்.

#0007 - காதலின் பொருட்டு ஓடையான மனம் பெரு நதியாகவும், நதியான மனம் சிறு ஓடையாகவும் மாறக்கூடும். எது எப்படியெனினும், காதலின் பொருட்டு நிகழும் அனைத்தும் அழகானதே. கவிதை போல, வானம் போல, பூமி போல, காற்று போல.

#0008 - ஆணுக்குள் பெண்மையையும், ஒரு பெண்ணுக்குள் ஆண்மையையும் அழகாய் மிக மிக அழகாய், அளவாய் மிக மிக அளவாய்ப் புகுத்துவது அல்லது மலர்த்துவது காதல் எனலாம்.

#0009 - காதலென்னும் புதிர் சக்திக்குள் ஏழ் கடலைக் காணலாம். பெருமலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், அருவிகள், பாலைவனம், காடுகள் என எல்லாவற்றையும் திகட்டத் திகட்ட ரசிக்கலாம். பறவைகள், மழை, வெய்யில், குளிர், பனித்துளி, நெருப்பு, கவிதை, நிழல், கனிவு, இனிமை போன்றவற்றை விரும்பி விரும்பிப் படிக்கலாம் அல்லது படைக்கலாம். அத்துடன்.. ஏக்கம், வலி, துணிவு, நம்பிக்கை, பசி, கனவு, இரக்கம், வானம், புல்வெளி, நட்சத்திரம், வானவில், பட்டாம்பூச்சி, இன்னும் இன்னும் இன்னுமெனத் தீரத் தீரக் கொள்ளலாம். அள்ளலாம். துள்ளலாம்.

Love in bytes a mini series

காதல் அளவற்றது. எல்லையற்றது. முடிவற்றது.

காதலே ஆதி அந்தம், முதல் முடிவு, அடி முடி எல்லாமும்.

#0010 - காதல் எப்போதும் காதலாகத்தான் இருக்கிறது. காதலர்கள் தான் எப்போதும் காதலர்களாக இருப்பதில்லை.

- பாடலாசிரியர் வடிவரசு

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Love in bytes, a mini series written by film lyricist Vadivarasu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more