For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

​ஷார்ஜாவில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட நேஷ‌னல் பொறியிய‌ல் க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர்கள்

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (அலுமினி) சந்திப்பு நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள "வெரோனா ரிசார்ட்"டில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இது எட்டாவது சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஐந்தாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும்பான்மையினர் குடும்பத்தோடு கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சேர்ந்த மாணவர்கள் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். இந்த வருட சந்திப்பு நிகழ்ச்சி இதுவரை இல்லாத வண்ணம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இதன் இணையதளம் துவங்கி வைக்கப்பட்டது (www.necuaealumni.org)

சங்கத்தின் தலைவர் நாசிர் உசைன் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் திரு. அரசு வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக திரு. லக்ஷ்ணமன் (மேனேஜிங் டைரக்டர், டெக்டான் என்ஜினியரிங்) கலந்து கொண்டு இணையதளத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முக்கிய விருந்தினர்களாக கல்லூரியின் முதல் வருட (1988) அலுமினி உறுப்பினர்களான பரமசிவன், அன்பு, பாபு, கணேஷ், சுரேஷ் சுவாமி, சுந்தர், முத்துமுருகன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.பரமசிவன் கல்லூரியின் கணினி பொறியியல் துறைத் தலைவர் ஆவார். இவர் கல்லூரியின் சார்பில் கலந்து கொண்டார்.

கல்லூரியின் இயக்குனர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் "காணொளிக் கலந்துரையாடல்"(வீடியோ கான்பரன்ஸிங்) வழியே வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

மதுரை அமீரக தியாகராஜா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சிவகுமார் அவர்களும் அழைக்கப்பட்டு இருந்தார்.

NEC alumni meet held in Sharjah

விழாவில் கலை நிகழ்ச்சிகளும், மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களான திருப்பதி, ஹுசைன், காசிராஜன், ஷாகுல், வசந்த், ஷ்யாம் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தற்போது நேஷனல் பொறியியல் கல்லூரியின் அமீரக அலுமினி சங்கத்தில், கடந்த 1988ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை படித்த 120 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அமீரகத்தில் புதிதாக வந்திருக்கும் நேஷ‌னல் பொறியிய‌ல் கல்லூரி மாணவர்கள், காசிராஜன் என்பவரை 050 148 7910 எனும் கைபேசி எண் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
National Engineering college alumni meet was held in Sharjah on november 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X