For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு சேலம் திரிவேணி குழுமம் ஒரு லட்சம் டாலர்கள் நன்கொடை!

By Shankar
Google Oneindia Tamil News

கேம்ப்ரிட்ஜ்(யு.எஸ்): ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு, சேலம் திரிவேணி குழுமம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்க உள்ளது.

டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தன் தலா ஐநூறு ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கி, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை அமைக்க முயற்சி எடுத்துள்ளார்கள்.

அவர்களுக்கு உறுதுணையாக பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டி வருகிறார்கள்.

Selam Triveni Group contributes $1 lakh to Harward Tamil Chair

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நடைபெற்று வரும் இந்தப் பணியில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திரிவேணி குழுமம் இணைந்துள்ளது.

ஒரு லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கி, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பெரிய நன்கொடை வழங்கிய முதல் தொழில் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சேலம் டூ ஹார்வர்ட்

இது குறித்த தகவல் தெரிந்ததும், திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரபாகரன் ஆகியோரை ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டோம். இருவரும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

செயல் இயக்குநர் கார்த்திகேயன் கூறுகையில் "திரிவேணி குழுமம்' தமிழகத்தின் சேலத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறோம்.

Selam Triveni Group contributes $1 lakh to Harward Tamil Chair

நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் சரவணன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்த தகவல்களை தெரிந்து, உரியவர்களைத் தொடர்பு கொண்டார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த பிறகு நிதியுதவி செய்வது குறித்து முடிவு செய்தோம்,

தமிழ் மொழிக்கு உலக அளவில் சிறப்பு சேர்க்கும் இந்த உன்னத முயற்சியில் எங்கள் நிறுவனமும் இணைந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

தமிழ் மொழிக்காக இந்த அரிய முயற்சியை முன்னெடுத்துள்ள டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்மந்தன் மற்றும் உறுதுணையாக செயல்படும் தமிழ் அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பாக 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம்

தாய்த்தமிழ் வளர்ச்சிக்கான இத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்' என்றார்.

கோதாவரி போலாவரம் அணைத் திட்டம்

சேலத்தில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் திரிவேணிக் குழுமம் சுரங்கத் தொழிலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

நிலக்கரி, பாக்சைட், இரும்புத் தாது உள்ளிட்ட கனிமச் சுரங்கங்களை சொந்தமாகவும், குத்தகை முறையிலும் நடத்துகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் தவிர இந்தோனேஷியாவிலும் சுரங்கங்கள் உண்டு.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில், போலாவரம் அணைக் கட்டுத் திட்டத்தில் திரிவேணிக் குழுமம் அதிமுக்கிய பணியாற்றுகிறது.

வேலைவாய்ப்பு பயிற்சி, இலவசப் பள்ளிகள், ஆதிவாசிப் பெண்கள் சுயமுன்னேற்றம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களையும் இந்நிறுவனத்தினர் செயல்படுத்தி வருகிறார்கள். 175 கிராமங்கள் பயனடையும் வகையில் 6 இலவச மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையம் நடத்துகிறார்கள்.

குடி நீர்த் திட்டம், சாலை, பாலங்கள் என கிராமப்புற கட்டமைப்புகளையும் இலவசமாக செய்து தருகிறார்கள். நாடு முழுவதிலும் சுமார் 7500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தலைமையிடம் கொண்டு செயல்படும் தமிழர்களின் நிறுவனம், தமிழ் மொழிக்காகவும் குறிப்பிடத்தக்க அளவில் செலவிடுவது பாராட்டுக்குரியதாகும்.

உலகில் உள்ள ஏனைய தமிழர் தொழில் நிறுவனங்களும் இத்தகைய தமிழ் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு, திரிவேணி குழுமம் முன் மாதிரியாக விளங்குகிறது என்றால் மிகையல்ல.

டல்லாஸில் சிறப்பு விருந்தினராக கார்த்திகேயன்...

இந் நிலையில், டல்லாஸ் நகரில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும், தமிழ்ப் பள்ளிகளும், ஒன்றிணைந்து ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக மிகப்பெரிய அளவில் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் உணவகங்கள் மற்றும் வியாபார / தொழில் நிறுவனங்களும் உடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

டிசம்பர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை நன்கொடையாளர்களுக்காக சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாள் 17ம் தேதி சனிக்கிழமை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் சிங்கர் ஜெசிக்கா பங்கேற்கும் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது.

இரண்டு நாட்களும் திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து ஃபெட்னா 2015 விழாவில் முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியையும், அதைத் தொடர்ந்த அனைத்து முக்கிய தகவல்களையும் ஒன் இந்தியா தமிழ் இணையத்தளம் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்த மேலதிக விவரங்களை http://harvardtamilchair.com/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம். டல்லாஸ் நிகழ்ச்சிக்கு, www.tinyurl.com/htcpledge என்ற பக்கத்தில் நன்கொடையாளர்கள் பதிவு செய்யலாம்.

-இர தினகர்

English summary
Salem based Thiriveni group is donating one lakh US Dollars for Harvard Tamil Chair. Executive Director Karthikeyan and Managing Director Prabhakaran shared the details with One India. They are proud to be associated with this great effort. Thiriveni group is owning and operating Iron ore, Bauxite and Coal mines in Tamil Nadu, Andhra, Karnataka, Odisha, Jharkhand states and also in Indonesia. In the meantime, all Tamil Organizations, Tamil Schools and Tamil businesses in Dallas have come together for organizing a grand and mega fund raising event on December 16 and 17. Karthikeyan is participating as a special guest in this event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X