• search

லண்டன் பல்கலைக்கழகத்திலும் அமைகிறது தமிழ் இருக்கை!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  லண்டன்: உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார்.

  இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த தமிழ் படிப்புகள், எம்.எச்.ஐச். தாம்சன் (M.S.H.Thomson), சான் மார் (Padma Sree John Marr), டூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), மற்றும் டேவிட் சுல்மான் (David Shulman) போன்ற தமிழ் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது என்ற பெருமைக்குரியது. 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995 களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்திவைக்கப்பட்டன. உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

  Tamil Chair in London varsity

  இங்கிலாந்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, செலின் சார்ச் தலைமையில், கடந்த வருடம் நவம்பர் (November 2017) முதல் செயல்பட்டு வருகிறது. கந்தசாமி செல்வன், பழனிவேல், சிவாபிள்ளை, சிவநேசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், பாலகிருசுணன், மற்றும் உமாதேவி ஆகியோர் தமிழ் இருக்கை அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள்.

  இந்த தமிழ் இருக்கை அமைப்பு, முதல் கட்டமாக ஆக்சுபோர்ட், கேம்பிரிட்ச், மற்றும் இலண்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்து, இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, இலண்டன் பல்கலைகழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

  இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் தான் இலண்டன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது என்பதும், இந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தான் பல அரும்பெரும் ஓலைச்சுவடிகளும், புராதான தமிழ் புத்தகங்களும் உள்ளன என்பது, இந்த தமிழ் இருக்கைக்கு வலு சேர்க்கும் பிற காரணிகள்.

  Tamil Chair in London varsity

  இந்நிலையில், இலண்டன் பல்கலைக்கழகம், தமிழ் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் படிப்புகளைத் துவங்குவதற்கு உரிய அதிகாரப்பூர்வ அனுமதியை இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன் வைத்து வழங்கினர். அனுமதிக் கடிதத்தை, கல்லூரி துணை முதல்வர் நவதேசு வழங்க, தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

  Tamil Chair in London varsity

  தமிழ் இருக்கை அமைத்தல் மற்றும் வருடாந்திர கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் என இருக்கைக்கு மொத்தம் 6 மில்லியன் பவுண்டுகள் முதல் 10 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலண்டன் தமிழ் இருக்கை 2021 இல் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ் இருக்கை கொண்டாட்ட நிகழ்வுகள், பல்கலைக்கழகத்தால் அக்டோபர் 14, 2018 அன்று கொண்டாடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  London university has accepted to form a Tamil chair in their varsity after the efforts by Tamils there in UK.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more