மெளன அஞ்சலி
புதுக்கவிதை எழுத்தாளர்களில் ஜெயபாஸ்கரன் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். இஸங்கள் பேசிக்கொண்டு, யாருக்கும் புரியாத கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில், தனதுஅனுபவங்களை எளிய தமிழ் நடையில் அழுத்தம் திருத்தமான கவிதைகளாக மாற்றித் தருபவர்.
இவரது கவிதைகளைப் படிக்கும் எவருக்கும், அட இது எனது வாழ்வில் நடந்ததே என்ற நெருக்கத்தைஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், இவரது கவிதைக்குரிய கரு அன்றாட வாழ்வின் சகல கூறுகளிலும் பரவிநிற்கிறது. இதோ அத்தகைய கவிதைகளில் ஒன்று.
மெளன அஞ்சலி
எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.
இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்.
இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த
முரணுமில்லை எனக்கு.
ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.
கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை.
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்.
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.
ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications