2014ல் உன்னுடன் ஒரு நாள்
உன் உச்சி நெற்றியில்
நிரந்தரமாய் பூத்திருக்கும் குங்குமம்-, நீ
குளிக்கும்போதும் கலைய மறுத்து
அடம்பிடிக்கும்..
உச்சந்தலையில் பொட்டில்லாத
முகம் பற்றி யோசித்திருந்து
இன்னொருமுறை கற்பனைக்கெட்டாமல்
தோற்றிருப்பேன்...
காதோரம் ஒன்றிரண்டு
நரைமுடிகள் கவிதை சொல்லும்
அநுபவ கோடுகளை அழிப்பதில்
உடன்பாடில்லாத உனக்கு -அவை
கூடுதல் அழகை கூட்டியிருக்கும்...
எனக்கு பிடித்த சமையல்
எனக்கு பிடித்த பலகாரங்களென
அன்றைய விருந்தோம்பல்
என்னை நோக்கியதாகவே இருக்கும்...
உனக்குள்ளும்..எனக்குள்ளும்
கடந்தகால நினைவலைகள்
வந்துபோனாலும்...உனக்கு
பறிமாற மட்டுமே நேரம் இருக்கும்...
குடும்ப வேலைப்பளுவும்
நேரமும் காலமும் -என்னை
போவென்று சொன்னாலும்... நீ மட்டும்
இன்னும் சில நாழி இருந்து செல்லென்பதை
சொல்லாமல் சொல்வாய்...
அடுத்து என்று காண்போம் என்று
அல்லலுறும் மனதின் ஆதங்கம் அது...
வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு
கணவரும் குழந்தைகளும்
வீட்டுக்குள் சென்றுவிட
நானுன் பார்வையைவிட்டு மறையும்வரை
பாதையை பார்த்திருப்பாய்...
என்ன தவம் செய்துவிட்டோம்
இப்படியொரு நட்பினை நான் பெறவென்று
உனக்கு மட்டுமல்ல எனக்கும்கூட தோன்றியிருக்கும்...
தூரத்தில் சென்ற நான் -உன் இல்லம் நோக்கி
திரும்பி பார்ப்பேன்...வாசலில்
தெய்வமாய் நீமட்டும் நின்றிருப்பாய்...
ஏனோ எனக்கு உன் வீடுமட்டும்
கோயிலென தெரிந்திருக்கும்...
ஆம் அவரவர் மொழிகளில்
தெய்வம், கோயில் என்பதற்கு
வெவ்வேறு அர்த்தம் இருக்கும்
எனக்கு உன் அன்பு தான்...எல்லாமே...!!
- சாந்தி மனோகரன் ([email protected])
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications