தமிழன் - நெல்லை சுதன்
தாய்மண் மீது கொண்ட பசியிலும்
தாய்மொழி ருசிக்கப் பேசும் பொலிவாம்
வேறின(உ) முண்டோ பாரினில் மொழிய
வேங்கை யாம்ஈழ மாந்தரைத் தவிர!
பொதிகையில் பிறந்தது பிள்ளைத்தமிழ்- ஈழர்
நாவில் இனித்தது வெல்லத் தமிழ்!
படுகையில் படரும் பசுங்கொடி போல் - அவர்
பண்புல மெங்கும் பசுமைத் தமிழ்!
அந்நிய மண்ணில் அகதியாய் நின்றும்
அழகு தமிழேயவர் பழகு தமிழ்!
திண்ணிய மாந்தர் இவர்தேச மெங்கும்
தென்றிசை மொழியாம் நம் தேன்தமிழ்!
சொந்தமும் சூழலும் சூறாவளி யாயினும்
சொக்கத்தமிழ் மட்டும் சொத்துரிமை கொண்டவன்!
பந்தமும் பாசமும் பாதியாய் மாறினும்
பக்கபலம் என்றன் தொட்டில்மொழி யென்றவன்!
ஆன்மீகம் பொய்க்கலாம் அரசியலும் பொய்க்கலாம்;
வான்கணிதம் பொய்க்கலாம் வரு(ம்)மழையும் பொய்க்கலாம்;
தேன்சுவையும் பொய்க்கலாம் தெள்ளமுதும் பொய்க்கலாம்;
தென்னன் தமிழ்ஈழச் சொல்லழகு பொய்க்குமோ?
இந்தியத் தமிழர் நம்ஈழத்துச் சோதரனை
இலங்கைத் தமிழனென்று இனங்காட்டி நிற்கையிலே
தாயகத் தமிழன்என் தொப்புள்கொடி உறவென்று
இரத்தத்தால் தத்துவமும் எழுதியவன் ஈழனன்றோ!
தாயைப் பேணி பெருமை சேர்ப்பவனே
தனயன் என்றதோர் தகைமை பெறுதற்போல்
தமிழை நாளும்போற்றி பொழுதும் மகிழ்பவனே
தமிழன் என்றதோர் மணிமகுடம் அணிகின்றான்!
- நெல்லை சுதன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. முதல் வீடு
2. இதுதான். . .?
3. கருணைத் தாய்
4. ஞானமோ ! நாணமோ!
5. பருவமே. . .!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications