For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேறு வேறாய் உலகு

By Staff
Google Oneindia Tamil News

நான் என் இருப்பிடத்தில்!
நீ உன் இருப்பிடத்தில் ..!
என் படிப்பு, என் வேலை .. என் வாழ்க்கை!
உன் படிப்பு, உன் வேலை .. உன் வாழ்க்கை!

என் அழகு, என் அழுகை .. அதில் உன் வருகை!
உன் இனிமை, உன் தனிமை .. அதில் என் தொடுகை!

இது வேறு, அது வேறாய்,
இரு வேறு பயணங்கள் .. ஒரே திசையில்!!

இங்கே, என்னைச் சுற்றி ஒரு உலகம்,
அதில் நீ வான்வெளியில்!
அங்கே உன்னைச் சுற்றியும் ஒரு உலகம்,
அதில் நான் உன் வளி மண்டலத்துக்கப்பால்!

... இருந்தாலும், அன்பு வழி தேடும்போதும்
உன்னை ஆத்திரங்கள் அசைக்கும்போதும்
அடைக்கலம் நீ உணரும்போதும் நான் உன் உலகம்!

சாத்திரங்கள் செய்தபோதும்
என்னை சூத்திரங்கள் ஜெயித்தபோதும்
அணைக்க மனம் விழையும்போதும்
நீ என் உலகம்!

ஆம்,
தனித்தனியே இருந்தபோதும்
உயிர் தஞ்சம் கொஞ்சம் உணர்ந்தபோதும்
நான் வேராய் .. உன் இருப்பிடத்தில்!

நீ உயிராய் ... என் இருப்பிடத்தில்!!


Doves -வேதா மஹாலஷ்மி([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
4. மழையில் குடை
5. அறுந்து போன ஒரு இழை
6. முகம்
7. இதுவும் சுகம்
8. மெளனங்கள்!


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X