For Daily Alerts
Just In

என் வேண்டுதல்...

மறைந்து போனீர்கள்...
என் கண்கள் குருடாக வேண்டினேன்
என்னை நுகரவில்லை...
என் சுவாசம் நிற்க வேண்டினேன்
என்னுடன் பேச மறந்தீர்கள்...
என் காதுகள் செவிடாக வேண்டினேன்
நான் பேசுவதை நீங்கள் கேட்கவில்லை...
என் நாவு ஊமையாக வேண்டினேன்
என்னை முழுமையாக மறந்தீர்கள்...
என் இதயம் நின்று போக வேண்டினேன்
எனக்காக நீங்கள் இனி இல்லை என்று அறிந்தேன்...
என் இரத்தம் உறைய வேண்டினேன்
நான் இதுவரை வேண்டியதெதுவும்...
நடந்ததே இல்லை...
நடக்கபோவதும் இல்லை...
என் வேண்டுதலை ...
நான் நிறுத்தப்போவதும் இல்லை...
-அனாமிகா பிரித்திமா(anamikapritima@yahoo.com)
Comments
Story first published: Tuesday, April 1, 2008, 12:33 [IST]