வினாக்குறிகளை வைத்தே எழுதிய கவிதை.. பெரியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியார்
வினாக்குறிகளை வைத்தே
எழுதிய விளக்கமான
கவிதை

இந்தக்
கரும்பலகை மட்டும்தான்
கேள்விகளை கற்றுத்தந்தது
சுயசிந்தனையால்-புதிய
பதில்களை பெற்றுத்தந்தது

Periyar birth day special poem

பதில் சொல்லக்கூட
பழகாதவர்களுக்கு
கேள்வி கேட்க
கற்றுத் தந்தவன்

மூட நம்பிக்கைக்கு
முடிவுரை எழுத நினைத்த
முன்னுரை

நீ பெரியார் என்று தெரியும்
எப்படி தந்தையானாய் ?
இன்று வரை
தமிழக பிள்ளைகளுக்கு
சாதிக் குறியீடின்றி
பெயர் சூட்டுகிறாயே
நீ தந்தை பெரியார்தான்

முதுமையையும்
மூத்திரச் சட்டியையும்
ஒருங்கே சுமந்து
நீ முழங்கியதை
மறந்திடலாகுமோ?

அன்று நீ
கையில் தாரெடுத்ததால்தான்
இன்று தமிழ்த் தேசியம்
பேசமுடிகிறது

பகுத்தறிவு பகலவா
இன்றும் பலர் அறியாமலேதான்
இருக்கிறார்கள்
நீ ஆண்டவனை எதிர்க்கவில்லை
ஆதிக்கத்தைத்தான்
எதிர்த்தாயென்பதை

- க.தங்கமணி, சிங்கப்பூர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Our reader G Thangamani has written a poem on Periyar on his 139th birth day.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற