இனி AI தான் எதிர்காலமே.. நினைச்சு கூட பார்க்க் முடியாத.. சம்பளத்தை கொட்டி கொடுக்கும் 5 படிப்புகள்
சென்னை: இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் கூட படுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ துறையில் வளர்ந்து வரும் வேலைகள் என்ன.. இதற்கு நாம் என்ன படிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
செயற்கை நுண்ணறிவு (AI) இன்று அதிவேகமாக வளர்ந்து வருகிறது.. சுகாதாரம், நிதி, கல்வி, இ-காமர்ஸ், ஆட்டோமொபைல்கள், பொழுதுபோக்கு எனப் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. இந்த வளர்ச்சியால் AI வல்லுநர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

AI வேலைகள்
குறிப்பாக மெஷின் லெர்னிங், டேட்டா அனாலிசிஸ், டீப் லெர்னிங் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த துறையில் சிறப்பாக இருக்கும் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலையும் கிடைக்கிறது. அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய வேலை எகோசிஸ்டமே உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் தேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அப்படியிருக்கும்போது இந்த ஏஐ துறையில் உள்ள 5 முக்கிய வேலைவாய்ப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்!
மெஷின் லெர்னிங்
முதலில் மெஷின் லெர்னிங் பொறியாளர் (Machine Learning Engineer).. டேட்டா, அல்காரிதம் கொண்ட சிஸ்டம்களை உருவாக்குவதே இவர்கள் தான். இந்த வேலைக்கு கம்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும்.. B.Tech/M.Tech, Python, R, TensorFlow, PyTorch சான்றிதழ்கள் அவசியம். இந்தியாவில் இந்த வேலைக்கு ஆண்டுக்கு ₹10-20 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். சர்வதேச அளவில் $120,000 வரை கூட ஊதியம் கிடைக்கும். இதற்கான தேவை அடுத்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக இருக்கும்.
டேட்டா சயின்ஸ்ட்
அடுத்தது டேட்டா சயின்ஸ்ட் (Data Scientist).. பிஸ்னஸ் சார்ந்த முடிவுகளைத் துல்லியமாக எடுக்க, பெரிய டேட்டா செட்களை தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்வது இவர்களின் வேலை. டேட்டா சயின்ஸில் முதுகலை/PG டிப்ளமோ, Python, SQL, ஸ்டாடிக்ஸ் அறிவு அவசியம். இந்தியாவில் இந்த வேலைக்கு ஆண்டுக்கு ₹8-15 லட்சம், வெளிநாடுகளில் $100,000க்கு மேல் ஊதியம் கிடைக்கும். இ-காமர்ஸ் மற்றும் பைனான்ஸ் துறைகளில் இவர்களுக்கு அதிக தேவை உள்ளது.
AI ஆராய்ச்சியாளர்
அடுத்தது AI ஆராய்ச்சியாளர்.. அதாவது AI Research Scientist.. புதிய AI மாடல்கள், வழிமுறைகளை உருவாக்குவதில் இவர்கள் வல்லுநர்கள். AI/டீப் லெர்னிங்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். புனைவர் பட்டம் அல்லது குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட அனுபவம் அவசியம். இந்த வேலைகளில் இந்தியாவில் ஆண்டுக்கு ₹15-25 லட்சம், வெளிநாடுகளில் $150,000-க்கு மேல் சம்பளம் கிடைக்கும்.. ஆராய்ச்சித் துறைகளில் இவர்களுக்கு நீண்டகால வேலைவாய்ப்பு இருக்கும்!
ரோபோட்டிக்ஸ்
அடுத்து ரோபோட்டிக்ஸ் பொறியாளர் (Robotics Engineer): ரோபோட்டிக் இயந்திரங்கள், தானியங்கி அமைப்புகளை வடிவமைத்து உருவாக்குபவர்களுக்கும் தேவை அதிகரிக்கும். ரோபோட்டிக்ஸ், AI/ML ஒருங்கிணைத்த இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) படிப்புகளுடன் Matlab, C++ அறிவு தேவை. இந்தியாவில் ஆண்டுக்கு ₹6-12 லட்சம், வெளிநாடுகளில் $90,000க்கு மேல் சம்பளம் கிடைக்கும். உற்பத்தி, சுகாதாரம், வாகனத் தொழில்களில் இவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
AI மேனேஜர் அடுத்து AI தயாரிப்பு மேனேஜர் (AI Product Manager).. AI தயாரிப்புகளின் உத்தி மற்றும் மேம்பாட்டிற்குத் தலைமை தாங்குபவர்கள் இவர்கள். AI/ML நிபுணத்துவத்துடன் கூடிய MBA, டேட்டா அனாலிசிஸ் திறன் அவசியம். இந்தியாவில் ஆண்டுக்கு ₹12-20 லட்சம், வெளிநாடுகளில் $110,000க்கு மேல் வருவாய் ஈட்டலாம்.
-
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?












Click it and Unblock the Notifications