குரு பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. மிஸ் பண்ணிடாதீங்க!
மேஷ ராசியில்தான் குரு பகவான் பயணம் செய்து கொண்டு இருந்தார். இந்த குரு பகவான் நேற்று மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு சென்றுள்ளார்.

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது.
இதனால் கீழ்காணும் 5 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்: போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
திருமணம் செய்யும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். தோல்விகளை மறைக்க வெளியே கோபமாக செயல்படுவது.. உங்களிடம் யாரும் துணிந்து பேச முடியாத அளவிற்கு முரட்டு தனமாக இருப்பது என்று இத்தனை காலம் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள். அதை கைவிடுங்கள்.
மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்ற சட்ட விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.
தனுசு ராசி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்: எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.
கும்பம் ராசி கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்: இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய பிரச்சனைகள் பிறக்கும்.
இந்த குரு பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை, சொந்த வீடு இல்லை போன்ற பிரச்சனைகள் தீரும்.. ஆனால் அனைத்திலும் சில இடையூறுகள் இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications