ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ஆடி மாத பலன்கள்: ஆனி மாதம் நிறைவடைந்து, ஆடி மாதம் தொடங்கியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு விசேஷமானது. ஊர்களில் ஆங்காங்கே கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழா கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். 17.7.25 - 18.8.25 வரையிலான ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆடி மாதம் 17.7.25 அன்று தொடங்கியுள்ளது. ஆடி மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதி மிகவும் முக்கியம். இந்த வருடம் ஆடி 1 ஆம் தேதி வியாழக் கிழமையும், 5 ஆம் தேதி திங்கள் கிழமையும் அமைந்துள்ளன. இதனால் உலகளவு மழையின் தாக்கம், வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெரிய இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தீ மற்றும் காற்றினாலும் அதிக பாதிப்புகள் இருக்கும்.

ஆடி நிகழ்ச்சிகள்
ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் பகவான் பெயர்ச்சி ஆகிறார். ஆடி மாதம் அஷ்ட லட்சுமி கடாசம் கொண்டுள்ளது. ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளன. கடவுளின் ஆசி பரிபூரணமாக நிறைந்தது தான் ஆடி மாதம். ஆடி மாதத்தில் நல்ல பலன்கள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் இருக்கும். நிலம், வீடு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொத்தில் இருந்த சட்ட சிக்கல்கள், பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஆடி மாதம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருக்கிறார். சந்திரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நல்ல செய்திகள் அடுத்தடுத்து வரும். சுப காரியங்கள் நடக்கும். தொட்டது துலங்கி எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனதில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்கு உங்கள் ராசிநாதன் சுக்கிரனை குரு பகவான் பார்க்கிறார். குரு பார்வை நன்மையை கொடுக்கும். கடந்த கால தடைகள் விலகி, எல்லாவற்றிலும் நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் ஏற்படும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. பூர்விக சொத்து பிரச்னை விலகும். தொழில் நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் அற்புதமான மாதம். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடைபெறும். சுக்கிர பார்வை இருப்பதால் உத்யோகம், தொழிலில் லாபம் அதி அற்புதமாக காணப்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்போர் புதிதாக தொழில் தொடங்குவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு குரு பார்வை இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் சரியாகி, உற்சாகமாக வலம் வருவார்கள். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்விக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். குழந்தைகளால் பெருமை சேரும். வெளிநாடு முயற்சியில் வெற்றி கிடைக்கும். விபரீத ராஜ யோகத்தால் திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றியடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் ராசிநாதன் குரு பகவான். தற்போது குரு நான்காம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் பார்வை பத்தாம் இடத்தில் விழுவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இறங்கிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நிலம், வீடு சொத்துகள் வாங்குவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்களால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். உத்யோகம், வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications