அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. ஆடி மாதத்தில் நிகழப்போகும் சூப்பர் மாற்றங்கள்.. முழு விவரம்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன்கிழமையில் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை வழிபடுத்துவது நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. அனைத்து விதமான நன்மைகளும் கிடைத்தாலும் அனுமன் சாலிஷா கேட்பது, சொல்வது, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுவது, ஆஞ்சநேயர் கோயிலில் அன்னதானத்துக்கு மிளகு சீரகம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
கோபம் வேண்டாம்
பெற்றோர், பெரியவர்களுடன் கோபப்படாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் செல்வது நன்மை பயக்கும்.
குடும்பம்
உறமுறை, நண்பர்கள் என யாரை நம்பினாலும் உங்கள் குடும்பத்திற்குள் அவர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், துணையைப் பற்றி மற்றவர்களிடம் மட்டமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். வேலைக்காரர் விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு, சுழுக்கு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவளிப்பது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நாள்தோறும் உடற்பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். நரசிம்மர், அனுமனின் பாடல்களை, காயத்ரி மந்திரங்களை கேட்பது நன்மையைத் தரும்.
வெற்றி பெறும் காலம்
தனுசு ராசிக்காரர்களுக்கு இனி பிரம்மாண்ட வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு இணக்கமான சூழல் ஏற்படும். வீட்டுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுப்புகளை சுமக்க தயங்கும் காலகட்டமாக இருக்கும். வார்த்தைகளால் காயப்படுத்துவதற்கு, காயமடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த மாதத்தில் தகவல் தொடர்புத் திறன் அதிகரிக்கும். உங்கள் அங்கீகாரத்தை தேடி பயணிப்பீர்கள். நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களுக்கான அடையாளம் கிடைக்கும். நல்ல முன்னேற்றமான காலம் உங்களைத் தேடி வரப்போகிறது. பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications