சபரிமலை ஐயப்பன் கோவில்..ஆடி மாத பூஜைக்காக இன்று நடை திறப்பு - மாஸ்க் கட்டாயம்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைனின் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதற்கான அனுமதி இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசனம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications