மிதுனத்துக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. திருமணம், வெளிநாடுனு ஒரே குஷிதான்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

aani-maadha-palan-2025-mithunam-gemini-rasi-people-get-good-benefits-fortunes-during-this-period

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.

இந்த ஆனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் 3 நட்சத்திரங்கள், 9 பாதங்களைக் கொண்ட ராசி மிதுனம். ராசியின் அதிபதி புதன் ராசியில் ஆட்சி பெற்றிருப்பது விசேஷம். உங்கள் ராசியில் குரு, சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் ஏற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

மாற்றம்

6, 11 அதிபதி எனும் செவ்வாய் 2 ஆம் இடத்தில் நீச்சமாக இருந்ததால் தொழிலில், புதிய வேலையில் மிகுந்த தடையை சந்தித்திருப்பீர்கள். இனி தொழிலில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, ராகு கேது எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறது. மாத கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் இந்த 4 கிரகங்களை வைத்தே மாத பலன்கள் சொல்லப்படுகிறது.

முயற்சிகளில் வெற்றி

உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதியான சூரியன் ராசியில் இருப்பதால் பெரிய விசேஷம். குரு சம்பந்தத்தோடு, புதனுடன் சேர்ந்திருப்பதால் உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்ல ஏற்றம் உண்டாகும். திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை பிராப்தம் உண்டாகும். வெளிநாடு சென்று உயல்கல்வி படிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

பணமே குறி

தந்தை வழி சொத்துகள் வந்து சேரும். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்படும். ஜூன் 22 ஆம் தேதி ராசிநாதன் ஒரே வாரத்தில் ராசிக்கு 2 ஆம் இடத்தில் செல்கிறார். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. எந்தெந்த இடத்தில் கால் எடுத்து வைத்தாலும் உங்கள் குறி பணத்தின் மீதே இருக்கும். விட்டதைப் பிடிக்க வேண்டும் என்று பணத்தை நோக்கியே செல்வீர்கள். பொருள்களை அடையும் யோகம் உண்டு.

திருமணம்

உங்கள் ராசியிலேயே சூரியன் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 11 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும். இரண்டாவது திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். அபிலாஷைகள் அனைத்தும் வெற்றி பெறும். மூத்த சகோதரர், சகோதரிகள் மூலமாக நல்ல ஏற்றம் உண்டாகும்.

வெளிநாடு செல்லும் யோகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்திற்குப் போவதால் கணவனம், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். சுப செலவுகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பிஆர் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். வேலையின் மூலமாக வெளிநாடு, வெளிமாநிலத்திற்குச் செல்லும் யோகம் உண்டாகும்.

தொழில்

ஐடி வேலையில் இருப்பவர்கள், கலைத் துறையினர், ஆடிட்டிங், அக்கவுண்டிங், கணிதம், கவிஞர், கட்டுரையாளர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஜூலை 11 ஆம் தேதி முதல் 13 வரையும், ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு பத்து குடம் தண்ணீர் கொடுத்து அபிஷேகம் செய்வது அற்புதமான பலனைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+