ஜோக்கராக மாறப்போகும் டிரம்ப்.. நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் பேராபத்து.. ஆவணியில் நடக்கப் போவது என்ன?
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் உலகத்தில் நடக்கப் போகும் மாற்றங்கள், நல்ல விஷயங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், ஆபத்துகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர்.

வெள்ள சேதம்
இந்த ஆவணி மாதத்தில் பெரும் வெள்ள சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தமிழ்நாடு வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து இப்போதிருந்த அதிகாரிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சென்னை பகுதியில் வெள்ளம், புயல், காற்று வருவதற்கான வாய்ப்புள்ளதாக பஞ்சாகத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆவணி மாதத்தில் விநாயகருக்கு சிறப்பான மாதமாகும். செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இரவு 9.57 மணியில் இருந்து மறுநாள் 1.26 வரையிலான மறுநாள் வரை சந்திர கிரகணம் ஏற்படும். டிரம்பின் கோபம் சரியும் நேரமாக இருக்கும். டிரம்பிற்கு ஆவணி மாதத்தில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஜோக்கராக மாறும் டிரம்ப்
குரோதத்துடன் தப்பு தப்பாக நிறைய விஷயங்களை செய்துவிட்டு பின்னர் இறங்கி வருவார். அமெரிக்காவில் இருப்பவர்கள் பதட்டப்படாமல் இருப்பது நல்லது. டிரம்பிற்கு உள்ளூரிலேயே பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் ஜோக்கராக மாறுவதற்கான வாய்ப்பு இந்த ஆவணி மாதத்தில் உள்ளது. நிறைய தப்பான விஷயங்களை செய்வார். டிரம்பின் பெயர் கெடக்கூடிய வாய்ப்புள்ளது.
தலைவர்கள் ஜாக்கிரதை
பெரும் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், பத்திரிகை துறையில் இருப்பவர்கள், ராணுவம், வான் படை, கப்பற் படையில் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், அதிகாரிகள், மக்களிடத்தில் செல்வாக்கு பெற்ற அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களுக்கு மிகுந்த கெட்ட நேரமாக இருக்கும்.
ஆரோக்கியம்
கேதுவுடன் சூரியன் சேர்வதால் பெரும் பொறுப்புகளில் இருக்கக்கூடிய முதல்வர்கள், பிரதமர், ஜனாதிபதி போன்றோர் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென உடல் நலக் கோளாறு, வண்டியில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாகனங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
இயற்கை பேரிடர்
இயற்கைப் பேரிடர்கள் தாங்க முடியாத அளவுக்கு வரும். நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்படும். சுனாமி எச்சரிக்கைகள் அடிக்கடி வரும். குருவின் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் மலைப் பிரதேசங்களில் மேகவெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இமாலயப் பகுதிகளில் நிறைய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்தியா, சிலோன், மலேசியா, இலங்கை போன்றவற்றில் நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
சென்னையில் வெள்ளம்
சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். குட்டி புயல்கள் வந்து வந்து போகும். வனவிலங்குகளுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும். யானைகள் ரயிலில் அடிபடுவது, விபத்து ஏற்படுவது போன்றவை ஏற்படும். கப்பல்கள் மோதல்கள் ஏற்படும். சரக்கு கப்பல்களில் தீப்பிழம்பு ஏற்படும். கடல் வழி போக்குவரத்தில் பிரச்சனைகள் வரும். மலைகளில் வெள்ளம், சரிவு, மலைக்கோயில்களில் பாதிப்பு, திருவண்ணாமலையில் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
கோயில்களுக்கு பாதிப்பு
காற்றழுத்த மண்டலங்கள் உருவாகி அச்சத்தை ஏற்படுத்தும். ஆவணியில் கோயில்கள், மலைக் கோயில்கள், குருவாயூர் கோயில்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கோயில்களில் கூட்டத்தால் பக்தர்களுக்கு பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. காசி, கேதர்நாத் போன்ற ஊர்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கங்கையின் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை. தமிழ்நாடு வரை வெள்ளத்தின் சீற்றம் இருக்கும்.
கவனம்
தலைவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் அமெரிக்கா தொடர்பான பதற்றம் குறையும். அரசியலில் தந்தை, பிள்ளைகள் போட்டுக் கொண்டிருக்கும் சண்டைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசியல் கூட்டணிகள் ஆவணி மாதத்தில் இருந்து வேகமெடுக்கும். அரசியலில் பிரபலமானவர்கள் தனி இயக்கத்தை தொடங்குவார்கள். யாருமே எதிர்பார்க்காததை செய்யும் மாதமாக இருக்கும்.
விமானம், கப்பல் விபத்து
ஆடியில் இருந்த விமான பாதிப்புகள் ஆவணி மாதத்திலும் தொடரும். விமானம் தொடர்பான விஷயங்களில் நிறைய தொந்தரவுகள் வரும். சுற்றுலா செல்லக்கூடிய கப்பல் பயணங்களில் பாதிப்பு ஏற்படும். நிர்வாக சீர்கேடு போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications