Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aavani matha rasi palan 2020: ஆவணி மாத ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு வீடு தேடி செல்வம் வரும்

ஆவணி மாதம் சிம்மம் மாதம். சூரியன் சிம்மராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். ஆவணி மாதத்தில் சூரியன் மட்டுமல்லாது அரச கிரகங்கள் என அழைக்கப்படும் செவ்வாய், குரு, சனி, புதன் ஆகிய ஆட்சி பெற்ற கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களில் யாருக்கு செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம் ராசியில் உள்ள சூரியனோடு மாத முற்பகுதியில் சஞ்சரிக்கும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். மிதுனத்தில் ராகு சுக்கிரன் கூட்டணி அமைந்துள்ளது, தனுசு ராசியில் கேது உடன் ஆட்சி பெற்ற குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது.

ஆவணி மாதத்தின் மத்தியில் சுக்கிரன் கடகம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் மாத பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று அமர்வதும் சிறப்பு. மாத இறுதியில் குருபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய் மாத இறுதியில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.
இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் தனுசு முதல் மீனம் வரையிலான நான்கு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்க ராசியில் இருக்கும் ராசி நாதன் குரு மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைவது சிறப்பு. இந்த மாதம் உங்களுக்கு அற்புத மாற்றங்கள் ஏற்படும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். செல்வ வளம் பெருகும். நீண்ட கால பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைக்கும். இந்த மாதம் திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்திரபாக்கியம் தேடி வரும். எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தேடி வந்து தொல்லை கொடுத்து வந்தது இனி நீங்கும். கணவன் மனைவி பிரச்சினையில் விட்டுக்கொடுத்து போங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. தேவையில்லாமல் வார்த்தையை விடாதீங்க. பேச்சில் கவனமாக இருங்க. சொத்து விற்பனையில் நல்ல லாபம் வரும். நெருங்கிய உறவினர்களை விட்டு பிரிய வேண்டியிருக்கும். வேலையில் சில பிரச்சினைகள் இருந்தாலும் பார்க்கிற வேலையை விட்டு விட்டு தவிக்காதீங்க சமாளிங்க. காதல் விசயங்கள் கைகூடி வரும். இந்த மாதம் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியும். பங்குச்சந்தை முதலீடுகள் அதிகம் வேண்டாம். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடமாற்றம் ஆகி எட்டாம் வீட்டிற்கு வருவதால் பண விவகாரங்களில் கவனமாக இருங்க. நகை, பணத்தை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க திரும்ப வராது, மனைவி உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருங்க. கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சமடையும் நேரத்தில் வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு வரும். பிசினஸ் இந்த மாதம் சராசரியான மாதம் என்பதால் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். அப்பாவின் மூலம் நல்ல செய்தி தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து விடுவீர்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள் நன்மைகள் தேடி வரும்.

மகரம்

மகரம்

உங்க ராசியில் ராசி நாதன் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க நான்காம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். ஆறில் சுக்கிரன் ராகு, எட்டில் சூரியன் புதன், விரைய ஸ்தானத்தில் குரு கேது என கிரகங்கள் அமைந்துள்ளது. மந்தநிலை மாறி ஒரு வித சுறுசுறுப்பு அதிகரிக்கும் நிதி நிலைமை நன்றாக இருக்கும் பணத்தட்டுப்பாடு நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். சகோதர சகோதரிகள் மூலம் உதவிகள் தேடி வரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். காதல் திருமணம் விசயங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆறில் ராகு சுக்கிரன் கடன் பிரச்சினை தீரும். சிலருக்கு வங்கிக்கடன் கிடைக்கும். அவசியம் இல்லாமல் கடன் வாங்காதீங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பார்க்கும் வேலையை விடாதீங்க. கவனமாக இருங்க. விரைய குரு கேது எவ்வளவு சம்பாதித்தலும் வீண் விரைய செலவுகள் வந்து கொண்டேதான் இருக்கும். அம்மா அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். சிவன் வழிபாடு அவசியம் பண்ணுங்க. வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு பண்ணுங்க சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்கு 7ஆம் வீட்டில் சூரியன், 3ல் செவ்வாய் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நிறைய பணவரவு வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடி நிலைகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் யோகம் வரும். வீடு வண்டி வாகனங்கள் வாங்க யோகம் வரும். திருமணம் சுப காரிய முயற்சிகள் நல்ல முறையில் நடக்கும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல ரிசல்ட் வரும். தொழில் லாபம் அதிகரித்து வருமானம் வரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். பெரிய அளவில் முதலீடு எதுவும் வேண்டாம். விரைய ஸ்தானத்தில் சனி இருப்பதால் திடீர் செலவுகள் வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கிறதே என்று கடன் நிறைய வாங்கதீங்க. மாத பிற்பகுதியில் புதன் எட்டாம் வீட்டிற்கு மாறும் போது யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. சுக்கிரன் ஏழாம் வீட்டிற்கு வந்து சூரியனோடு இணைந்து உங்க ராசியை பார்வையிடும் போது முகப்பொலிவு அதிகரிக்கும். திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு பண்ணுங்க.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடக்கப்போகிறது. பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்க பணம் இல்லாவிட்டாலும் யாருடைய பணமாக இருந்தாலும் உங்க கைகளில் இருக்கும். 2ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தேவையில்லாமல் பேசி வம்புல மாட்டிக்காதீங்க. வீட்டிலே வெளியிலோ பேசும் போது நிதானம் தேவை. அலுவலகத்தில் கோபப்பட்டு பேசி பிரச்சினையை விலை கொடுத்து வாங்காதீங்க. நாவடக்கம் தேவை. உங்களுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பயணங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே தேர்வு எழுதி ரிசல்ட் வரலையே என்று கவலையில் இருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் வரும். வீடு சொத்து வாங்குவதற்கான கடன் கிடைக்கும். உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் நன்மையும் ஆதாயமும் தேடி வரும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு அவசியம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+