சிம்ம ராசிக்குள் சூரியன்.. 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் வரும் 17 ஆம் தேதிபிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 7.50 மணிக்கு சூரிய பகவான் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுனம் ராசியினருக்கு சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்து மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் ஏற்படும்.
திடீர் புகழ், அதிர்ஷ்டங்கள், பண வரவு போன்றவை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நிறைய ஏற்றங்கள் காணப்படும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூணமாக நீங்கும்.
பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு நோய், கடன், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எந்த காரியத்தை தொட்டாலும் அதில் ஒரு தடை என்கிற நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா விதமான தடை தாமதங்களில் இருந்தும் தப்பிக்கும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன், பதவியுடன் கூடிய வேலை கிடைக்கும்.
திருமணத்திற்கு முயற்சி செய்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கட்டாயமாக நல்ல வரன்கள் அமையும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடுகள் செல்ல விரும்புவோருக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். விசா கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் சண்டை, பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். காதலிப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். தேவையில்லாத சண்டைகள், பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதிய கூட்டாளிகளால் ஏற்றம் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்லவர்கள் போல பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதால் உறவுக்காரர்களிடம் மிகுந்த கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த லட்சியங்களை அடையக் கூடிய அமைப்பு உள்ளது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்து செயல்படுவது நன்மையைத் தரும். இதன் மூலம் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு ஆழமாகவும், வலுவாகவும் இருக்கும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும்.
யாரைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தற்பெருமை பேசுவதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். நீங்கள் இப்போது இருக்கும் நிலையை நினைத்து நன்றி செலுத்துவது நல்லது. உறவுகள், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு ஏற்றத்தைப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எல்லாவிதமான வெள்ளிகளும் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அனுகூலம் ஏற்படும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அனுகூலம் ஏற்படும்.
தொழில் ரீதியாக நல்ல ஏற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். தைரியம் ஏற்படும். அசையும், அசையா பொருள்களின் சேர்க்கை உண்டாகும். விருச்சிக ராசியினர் வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும்.
அப்பாவின் ஆரோக்கியம், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்களும், நம்பிக்கையும் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினர் கணவர், மனைவி இருவர் விஷயத்திலும் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். உங்களுடைய மறைமுக எதிரிகள் பலம் உயர்ந்துள்ளதால் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகளும், அனுகூலமும் ஏற்படும். 70 வயதைக் கடந்தவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. படிக்கட்டில் மெதுவாக செல்வது நல்லது. பழக்கவழக்கத்தில் பேராசை படாமல் இருப்பது நல்லது. தங்கள் வயதை மறந்துவிட்டு சிறுவர் போல மற்றவர்களிடம் நடந்து கொள்வதை, தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இளம் வயதைச் சார்ந்த கும்ப ராசியினருக்கும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித மாற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
சேமிப்பு, முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகக்கூடிய நல்ல காலகட்டம். ஜாயிண்டுகளில் ஏற்படும் வழிகளில் கவனம் தேவை. தம்பதி சமேத தெய்வ வழிபாடுகளைச் செய்வது, உக்கிர தெய்வ வழிபாடுகளைச் செய்வது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
