Thulam rasi palan: துலாம் ராசிக்கு அடிச்ச பம்பர் பரிசு.. கோடிகளில் புரளும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

aippasi-matha-palan-2025-lets-see-what-kind-of-benefits-and-fortunes-that-thulam-people-will-get-i

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசியின் ராசியாதிபதி நீசமாக இருப்பதால் வரும் 16 ஆம் தேதி வரை மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அக்டோபர் 16 ஆம் தேதிக்குப் பிறகு ராசிக்குள்ளேயே ஆட்சி பலம் பெற்று சுக்கிரன் வருகிறார். இதனால், விபரீத ராஜயோகம் உண்டாகும். சூரியன் நீசமாக இருந்தாலும் சுக்கிரன் வந்த பின்னர் சூரியனும் பலப்படும். இதனால் நீசபங்க ராஜயோகம் உருவாகும். சுக்கிரன், சூரியனின் இணைவு சுக்ராதித்ய யோகத்தை உண்டாக்கும்.

திடீர் லாபம்

இந்த யோகத்தால் பெயர், புகழ், மதிப்பு, வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் என்றாலே நகை, பணம், புதிய ஆடைகள் போன்றவை அமையும். திடீர் லாபங்கள் பணவரவு உண்டாகும். எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். செவ்வாய் குருவின் பார்வையை பெறுவதால் எதிர்பார்க்காத பண வரவு உண்டாகும். பங்குச் சந்தையில் எதிர்பார்க்காத யோகம் உண்டாகும்.

இடம், வீடு வாங்கும் யோகம்

திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும். பொருளாதாரத்தில் உச்சம் பெறுவீர்கள். பார்ட்னர்களுக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புத்துணர்ச்சி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். சனி வக்கிரகதியில் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் இடம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சனி வக்கிரமாக இல்லையெனில் வரக்கூடிய பணம் எல்லாம விரையம் ஏற்படும். இருப்பினும் சேமித்து வைக்கும் யோகம் உண்டாகும்.

வேலைவாய்ப்பு

குரு பகவான் 18 ஆம் தேதிக்குப் பிறகு உச்சமடைவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலை இழந்து மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும் கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும் செய்கின்ற செயலில் வெற்றிகள் உண்டாகும். எதை செய்தாலும் பெரிய பிரம்மாண்ட யோகம் உண்டாகும். நகை வாங்கும் யோகம் உண்டாகும்.

யோகம்

உயர் பதவி, நல்ல சம்பளத்தோடு கிடைக்கும். துலாம் ராசிக்கு மிக அற்புதமான யோகமான மாதமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம், குழந்தை, பெற்றோர் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தையின் மூலம் பண வரவு உண்டாகும். இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாடு சார்ந்த பண வரவு உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+