அதிசார குருப்பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
அதிசார குருப்பெயர்ச்சி பலன்: அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கிரக மாற்றம்
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில ராசியினருக்கு சுப பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிசார குருப்பெயர்ச்சி
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குச் செல்வார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருட குருப்பெயர்ச்சி மிகுந்த சிறப்பாகும். குரு கடகத்தில் உச்சமடைந்து மகரத்தில் நீச்சமடைகிறார். நிறைந்த மனதுடன் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகிறார்.
இந்த அதிசார குருப்பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 2 ஆம் இடத்தில் தன ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைகிறார். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும் காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் குரு உச்சம் பெறுவதால் வர வேண்டிய பழைய பணங்கள் திரும்பக் கிடைக்கும். வேலையில் பழைய அரியர்ஸ் பணங்கள் போன்றவை வந்து சேரும்.
குடும்பம்
உங்கள் ராசிக்கு 7க்கு 10க்கு உரியவர் குரு பகவான். 7 என்பது திருமண ஸ்தானம், களஸ்திர ஸ்தானம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், சிறிய சிறிய பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருமண விஷயங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தற்போது குரு உச்சமடைந்து 2 ஆம் இடத்துக்கு வருவதால் மற்றவர்கள் உங்களை சேர்த்து வைப்பார்கள். கணவன், மனைவி இணக்கமாகச் செல்வது நல்லது. பெரிய பிரச்சனைகள் வராது.
தொழிலில் முன்னேற்றம்
10க்கு உடையவர் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் சார்ந்த விஷயங்களில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். பிஸியான காலகட்டமாக இருக்கும். ஓடாத கடைகள் கூட இனி நன்றாக செயல்படத் தொடங்கும். பாதகாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதால் உணர்ச்சி வசப்படாமல், கோபப்படாமல் இருப்பது நல்லது. எல்லோரிடமும் இணக்கமாகச் சென்றிருப்பது நல்லது.
குடும்பத்தில் மகிழ்ச்சி
கணவன், மனைவிக்குள் சண்டைகள் தீருகிற பொன்னான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஹோட்டல், உணவு சார்ந்த துறையில் இருப்பவர்கள், நீர் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுவதால் அழகு சார்ந்த விஷயங்களும் நன்றாக இருக்கும்.
நல்ல நேரம்
வேலை மீதான கவனம், ஈர்ப்பு அதிகமாகும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் தொடங்க அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். தொட்டது துலங்கும் காலகட்டம். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சிகள் மிகப்பெரிய மாற்றங்களும், ஏற்றங்களும் காத்திருப்பது உறுதி.












Click it and Unblock the Notifications