துலாம் ராசிக்கு காத்திருக்கும் ஆப்பு.. வேலையில் வரப்போகும் மிகப்பெரிய கண்டம்.. மிக கவனம்
August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு 2, 7க்கு உடைய செவ்வாய் பகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். இது கோபுர கலச யோகமாகும். பூமி சார்ந்த லாபங்கள் கொட்டும். ரியல் எஸ்டேட், சிவில் துறையில் இருப்பவர்களுக்கு புதிய புதிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கும். அனைவராலும் விரும்பப்படக் கூடிய பொறியாளராக இருப்பீர்கள். பெரிய பெரிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, ஜல்லி, மணல் துறையில் இருப்பவர்களுக்கு யோகங்கள் உண்டாகும். தொழிலில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். பங்குச் சந்தையில் வெற்றி பெறுவீர்கள்.
பிரச்சனை
10 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் அல்லது உங்களாலேயே பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். சனி 6 ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றிருப்பதால் 12, 13 ஆம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வேலையில் பொறுமை, நிதானம் தேவை. புதிய ப்ராஜெக்ட்களை செய்யாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது.
விபரீத ராஜயோகம்
11 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். சோஷியல் மீடியாவில் பதிவு போடுவதை தவிர்ப்பது நல்லது. தலைமையை விமர்சிக்காமல் இருப்பது மேன்மையைத் தரும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விமர்சனங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 12 இல் சுக்கிரன் நீச்சமாகி உள்ளார். இதனால், விபரீத ராஜயோகம் உண்டாகும். ஆனால், ஆரோக்கியத்தில் கருமுட்டை, பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தைரியம்
9 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் பெண்களுக்கு தைரியம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்களுக்கு ஏற்றம் ஏற்படும். பழைய சம்பிரதாயங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். கண், பல், முடி சார்ந்த பிரச்சனையில் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய க்ரீம்களை போடுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் செலுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
பதவி, பொறுப்பு
அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி பதவிகள் கிடைக்கும். சங்கங்களில் தலைமைப் பதவி கிடைக்கும். குரு பார்வை இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். சூரிய பகவானுக்கு உரிய ருத்ர ஹோமம் செய்து வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். சிவனுக்கு வில்வ மாலை சாற்றுவது நன்மை தரும். சூரியனார் கோயிலில் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை
அதிர்ஷ்ட தேதிகள் - ஆகஸ்ட் 2, சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் மேற்கொள்வது நல்லது.
அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 3, 4
வழிபாடு - முருகப் பெருமான் வழிபாடு
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட திசை - கிழக்கு


Click it and Unblock the Notifications
