Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம்

ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் கன்னி ராசியில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும் சிம்ம ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்வார். புதன் கடக ராசியில் இருந்து சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்கிறார். சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறுவதும், புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெறுவதும் சிறப்பான கால கட்டம் இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் ஆகஸ்ட் மாதத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு மங்கல யோகம் கை கூடி வரப்போகிறது. நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். மாத பிற்பகுதியில் ராசி நாதன் சூரியன் ஆட்சி பெறுகிறார் கூடவே குருவின் பார்வையும் கிடைப்பதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று இந்த மாதம் பாடப்போகும் அதி உன்னத மாதமாக அமைந்துள்ளது.

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட நீங்கள். இந்த மாத முற்பகுதியில் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். நல்ல வேலை அமையும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்..

பார்வையால் பலன்கள்

பார்வையால் பலன்கள்

இந்த மாதம் முழுவதும் சிம்ம ராசியில் செவ்வாய் பயணம் செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும். உங்களுக்கு அற்புதமான மாதம்.சிம்ம ராசியில் செவ்வாய் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பாராட்டுக்களும் பதவி உயர்வும் தேடி வரப்போகிறது. குருவின் பார்வை சிம்ம ராசியில் உள்ள செவ்வாயின் மீது விழுவது சிறப்பு. குரு மங்கல யோகத்தை தரப்போகிறது. வீடு கட்ட பூமி பூஜை போடலாம். குரு பார்வையில் சூரியனும் செவ்வாயும் இணைவது சிறப்பு. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி, ராசி அதிபதி, பாக்ய ஸ்தான அதிபதி ஒன்றிணைந்து நிறைய நன்மைகளைத் தரப்போகின்றனர்.

எதிர்கால வெற்றிகள்

எதிர்கால வெற்றிகள்

சுக்கிரன் சிம்மராசியில் பயணிப்பது சிறப்பு மாத பிற்பகுதிகளில் சுக்கிரன் நீச்சமடைவதால் புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டம் புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை தருவதால் உங்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. நினைத்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் வாய்ப்பு கை கூடி வந்துள்ளது. தெளிவான மனநிலையும் திடமான சிந்தனையும் இருக்கும். திருமண சுப காரியம் கை கூடி வரும். குரு பார்வையும் உங்கள் ராசிக்கு கை கூடி வந்துள்ளதால் திருமணம் தொடர்பாக பேசி முயற்சி செய்யலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிடுவதற்கு ஏற்ற கால கட்டம். சொத்துக்களில் முதலீடு செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வயிறு பிரச்சினைகள் வந்து போகும்.

கன்னி ராசிக்கு மகிழ்ச்சி

கன்னி ராசிக்கு மகிழ்ச்சி

ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் ராசிநாதன் வலுவான நிலையில் பயணம் செய்கிறார். ஆட்சி, மூலத்திரிகோணம் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். இந்த மாதம் அற்புதமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர்க்கொள்வீர்கள். தொட்டது துலங்கக் கூடிய நல்ல மாதம். உங்களின் திறமையும் புத்திசாலித்தனமும் பளிச்சிடும். சிலரது வாழ்க்கையில் காதல் மணியடிக்கும்.

மாணவர்களுக்கு சிறப்பு

மாணவர்களுக்கு சிறப்பு

சனி பகவான் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. குரு பகவான் ஆறாம் வீட்டில் இருப்பதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள். வேலை விசயமாக மாத முற்பகுதியிலும் மாத கடைசியிலும் முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு படிப்பு விசயமாக குழப்பங்கள் வந்து நீங்கும். மாத பிற்பகுதிகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

நன்மைகள் நடைபெறும்

நன்மைகள் நடைபெறும்

ஆகஸ்ட் 9ஆம் தேதி புதன் இடப்பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் மன அமைதி முக்கியம். திருமணம் சுப காரியம் தொடர்பாக செய்யும் முயற்சிகள் தடைகளை ஏற்படுத்தும். புத்திரபாக்கியம் தொடர்பாக சில தடைகள் வந்து நீங்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசியில் நீச்சம் பெற்று பயணிப்பார். சிலருக்கு மனதில் காதல் மணியடிக்கும். பயணங்களில் கவனம் தேவை. மாத இறுதியில் புதன் உங்கள் ராசியில் வந்து ஆட்சி உச்சம் பெற்று அமரும் காலத்தில் அற்புதமான பலன்கள் நடைபெறும். நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். தியானம் செய்வது மன ரீதியான உடல் ரீதியான பாதிப்புகளை சமாளிக்க உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+