கன்னி ராசியினரின் சொந்த வீடு கனவு நிறைவேறப் போகுது.. கோபத்தை மட்டும் தவிர்த்துக்கோங்க
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் இது. ராசியாதிபதி புதன் லாபத்தில் அமர்ந்திருப்பதால் யோகம் ஏற்படும். முன்னேற்றம் ஏற்படும், திருமண யோகம் கைகூடும். பதவி உயர்வு, பிளாட் வாங்கும் முயற்சி போன்றவை உண்டாகும். திரைப்படக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், இசைக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். 10 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பண வரவு
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். சனி வக்கிரமாக இருப்பதால் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சமாதானமாக, இணக்கமாக செல்வது நல்லது. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அவருடைய வாழ்க்கையில் பிரச்சனை, அல்லது அவரால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை, மன வருத்தம் உண்டாகும். வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வேகத்தை தவிர்க்க வேண்டும்.
கோபம் வேண்டாம்
தகவல் தொடர்பால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தன காரகனுடன் சுக்கிரன் சேர்ந்து தன ஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல பண வரவு உண்டாகும். 10 ஆம் இடத்தில் குரு , சுக்கிர பகவான் அமர்ந்திருப்பதால் அற்புதமான வளர்ச்சி தொழிலில் ஏற்படும்.
சொந்த வீடு கட்டும் யோகம்
4 ஆம் இடத்துக்கு அதிபதியான குருவும் அமர்ந்திருப்பதால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். கன்னி ராசிக்கு புதிய கார், புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சனி 7 இல் அமர்ந்திருப்பதால் காதல் விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள், லிவிங்கில் இருப்பவர்கள் பிரிவதற்கான வாய்ப்பு அல்லது திருமணத்திற்கு ஒத்துழைக்காத சூழல் ஏற்படும். சனி 7 ஆம் இடத்தில் இருப்பதால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்வோர் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கவனமாக செல்வது நல்லது.
கவனம்
பயணங்களின்போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் மிகுந்த கவனம் தேவை. கூட்டமாக பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். புதன் 11 இல் அமர்ந்திருப்பதால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அப்பாவின் உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
தொழில் ரீதியாக நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன. மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் பெருக நரசிம்மர் வழிபாடு, குன்றத்தூர் முருகனை வழிபடுவது நல்லது.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications