Meenam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் மீனம் ராசி.. தொழிலில் அதிஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

Meenam lucky zodiac signs

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு சப்தமாதிபதி புதன் பகவான் பஞ்சமத்தில் இருப்பது யோகமாகும். சிலருக்கு காதல் உறவுகள் புதிதாக அமையும். விரும்பியவரை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். ஏழரை சனி நடப்பதால் சிலருக்கு காதல் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜென்மசனி காலத்தில் ஏதாவது விஷயம் தடைபட்டால் கவலைப்படத் தேவையில்லை.

வேலையில் மாற்றம்

ராசியில் சனி பகவான் அமர்ந்து ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. உடல்நிலை பாதிப்பு, வேலையில் நெருக்கடி, வேலை மாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் போன்றவை ஏற்படும். வேலை மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்வது நல்லது. ராசிக்கு அதிபதி குரு பகவான் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நல்ல வருமானங்கள் வரும். ஆனால், கணவன், மனைவிக்கிடையே கருத்து மாறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

கார் வாங்கும் யோகம்

சுக்கிர பகவான் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தங்க நகைகள், கார் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அக்கறை செலுத்துவது நல்லது. இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

வாகனங்களில் கவனம்

அஷ்டாமதிபதி சுக்கிர பகவான் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களுக்கு சேதம், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் 7 ஆம் இடத்திலும், புதன் 5 ஆம் இடத்திலும் இருப்பதால் லிவிங்கில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டாகும். முதல் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் கூடி வரும்.

வழிபாடு

பூர்வீக சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். அந்நிய நாட்டில் வசிக்கக்கூடிய சிலருக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் ஏற்படும். 10 ஆம் இடத்தின் அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் 10 ஆம் இடத்தை பார்ப்பது யோகத்தை ஏற்படுத்தும். தொழில் வாய்ப்புகள் கூடி வரும். அற்புதமான யோகமான காலகட்டமாக இருக்கும். காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்வது நல்ல ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+