அதிர்ஷ்ட கதவைத் தட்டும் குரு பகவான்.. தன யோகத்தால் மகர ராசிக்கு கிடைக்கப் போகும் சூப்பர் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இந்த குரு வக்ர நிவர்த்தியால் மகர ராசியினர் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றனர். எந்தவிதமான நல்ல பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக காணலாம்.

குரு தற்போது ரிஷபம் ராசியில் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

guru vakra nivarthi magaram

மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்தவர்களே உங்களுடைய ராசியில் அமர்ந்திருக்கும் உத்திராடம், அவிட்டம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தியால் வரும் பலன்கள், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.

குருவுக்கு பார்வை பலம் உண்டு. 9 ஆம் பார்வையாக ரிஷப ராசியில் இருந்து மகர ராசியைப் பார்ப்பதால் அதாவது குரு தொழில் ஸ்தானத்தில் பார்ப்பதால் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தப் போகிறார். வராமல் இருந்து வந்த பணங்கள் உங்களை வந்து சேரும். பெரிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களை செய்வீர்கள். திடீர் பண வரவுகள், பண மேலாண்மை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

குரு தற்போது ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவார். குரு வக்ரமாக இருந்து நிவர்த்தியடைவதால் அதிர்ஷ்ட கதவைக் கொடுக்கப் போகிறது. அதே நேரத்தில் தன யோகத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட கால முதலீடுகள் சிறப்பான பலன்களைத் தரும். வரும் பணங்களை சேமிப்பது நல்லது. உத்திராடம், திருவோணம், அவிட்ட நட்சத்திரத்திரக்காரர்கள் சேமிப்பை அதிகரிப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் அபரிமிதமான யோகங்களைப் பெறுவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஐந்தாம் பார்வையாக இருப்பதால் சிறப்பான பலன்கள் இருக்கும். அவிட்டம் நட்சத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும் யோகங்கள் உண்டு.

guru vakra nivarthi magaram

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பழைய வீடுகளை வாங்குவதற்கான யோகம் உண்டு. கிராமங்களில் சென்று வசிக்கக்கூடிய வகையில் வீடு வாசல் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. புராதன கலை நுணுக்கம் உடைய இடங்களைச் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு அமையும், புனித ஸ்தலங்கள், புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான சூழல் உருவாகும்.

நல்லதொரு பெரிய கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தெய்வீக சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதற்கான ஆர்வம் உண்டாகும். எந்தவிதமான கஷ்டங்களையும் கடந்து வந்து வரக்கூடிய சுகங்களை சமநிலையுடன் அனுபவிக்கும் யோகம் உண்டு. அனைத்து விஷயங்களையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுத்துவீர்கள். தெளிவான சிந்தனைகள், பணத்தை பன்மடங்கு பெருக்குவதற்கான ஐடியாக்கள் வரும்.

வளர்ச்சிமிகு விவசாயம் தொடர்பான தொழில் துறை, தோல் பதனிடும் தொழில், கனிமத் துறையினர், பழைய பொருள்கள் விற்பது வாங்குவது போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி நல்ல பல பலன்களைக்கொடுக்கும்.

பரிகாரம் - அருகில் இருக்கும் மலை அல்லது குளத்தை சுத்தப்படுத்துவது நல்லது. குளங்களை ஆழப்படுத்துவது, மலைப் பகுதிகளை சுத்தப்படுத்துவது, வீடுகளில் புனரமைப்பு செய்வது, சிவன் கோயில்களில் உழவாரப் பணிகளில் ஈடுபடுவது போன்றவை உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும். இந்தப் பரிகாரங்கள் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையும், பலத்தையும் மாற்றும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+