தனுசு ராசியின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. அதிர்ஷ்ட தேவதை கூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்டும்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது தனுசு ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் தனுசு ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாகிய குரு பகவான் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். 6 ஆம் இடம் என்பது கடன், நோய், எதிர்ப்பு, பகையில் உட்கார்ந்திருக்கிறார். 6 ஆம் அதிபதி சுக ஸ்தானத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன், நோய், எதிப்பு, பகையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவைருக்கும் சித்திரை மாதத்தின் இரண்டாம் பகுதியில் இருந்து விடுதலை அடையப் போகிறீர்கள்.
கடன் தீரும்
கடனில் இருந்து விடுதலை அடையப் போகிறீர்கள். எதிர்ப்பு, ஆரோக்கிய குறைபாடுகள், பகைகள் நீங்கும். சித்திரை 31 ஆம் தேதி குருப்பெயர்ச்சியாகி ராசியைப் பார்ப்பதால் நல்ல மேம்பாடு உண்டாகும். சனி பகவான் லக்கினத்தைப் பார்ப்பதால் பிடிவாத குணத்துடன் இருப்பீர்கள். ஆனாலும், அந்த சனி பகவான் தனத்தைக் கொட்டிக் கொடுப்பார்.
பணம் கொட்டும்
சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீடு, வண்டி, வாகனம் மூலமாக அபரிமிதமான லாபம் உண்டாகும். மனைவி மூலமாக சொத்துகள் சேர்க்கை உண்டாகும். சித்திரை மாத முடிவில் இருந்து தனுசு ராசியினருக்கு நல்ல காலமாக இருக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
குரு 2 ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், வளர்ச்சி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வீடு கட்டுவதற்கு, இடம் வாங்குவதற்கு, நிலம் வாங்குவதற்கு, வீட்டைச் சாந்த விஷயங்களுக்கு பணம் செலவாகும். வீடு வாங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். பழையதை நோக்கி உங்களுடைய எண்ணம், செயல் செல்லும். முயற்சிகள் எல்லாமே பலிக்கும் காலகட்டமாக இருக்கும். சனி பகவானால் பெரிய கெடுபலன்கள் ஏற்படாது.
பாக்கியம்
தாயின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. தாயோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அவர்களிடம் பொறுமையாகவும், நிதானமாகவும் செல்வது நல்லது. சூரிய பகவான் உச்ச பலத்தில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பாக்கியத்தை கொடுக்கப் போகிறார். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள், தகப்பன் சார்ந்த விஷயங்கள், தகப்பன் சார்ந்த விஷயங்களில், பாக்கியம் சார்ந்த விஷயங்களில் நல்லது நடக்கும்.
முயற்சிகளுக்கு பலன்
எதற்காக கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களோ அந்த பாக்கியம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, குழந்தை பாக்கியம் உண்டாகும் யோகம் உண்டு.
ஆரோக்கியத்தில் கவனம்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அதிக அளவிலான கடன்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குழந்தைகளை அரவணைப்போடு பார்த்துக் கொள்வது நல்லது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications