Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் 5 ராசிக்கு மெகா ஜாக்பாட்..லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர் குறித்து பார்க்கலாம்.

இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

december-month-rasi-palan-which-5-zodiac-signs-will-get-good-benefits-and-lots-of-money

லட்சுமி நாராயண யோகம்

குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த யோகத்தால் விருச்சிகம், ரிஷபம், துலாம், கும்பம், மிதுனம் ராசிகளுக்கு பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். வீடு, நிலம், புதிய கடன், வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்தில் மேற்கண்ட 5 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ராசி லக்கினத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருக்கின்றனர். மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பாட்டு, இயல், இசை, நாடகம், நடனம் போன்ற முக்கிய விஷயங்களைச் செய்வீர்கள். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, ஆவணங்களில் கையெழுத்திடுவது என வெற்றிகளைக் குவிப்பீர்கள். அஷ்டமத்தில் குரு இருப்பதால் தேவையில்லாத சகவாசம் ஏற்படும். இமெயில், ட்வீட், முகநூல், வாட்ஸ்அப் தொடர்புகளால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் இடத்தில் செவ்வாய், சூரியன் சேர்ந்து இருப்பது யோகத்தைக் கொடுக்கும். சனியின் பார்வையில் உள்ளதால் கண், முகம், பற்களில் பிரச்சனைகளில் வரும் வாய்ப்புள்ளது. பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் புதிய ஆராய்ச்சிகளை செய்வது, புதிய படிப்புகளை படிப்பது, புதிதாக லோன் வாங்குவது, புதிய கடன்களை அடைப்பது போன்ற யோகம் உண்டாகும். லோன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் பண வரவிற்குப் பஞ்சமே இருக்காது. காதல் அற்புதமாக இருக்கும். மன சந்தோஷம் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். லட்சுமி நாராயண யோகத்தால் கண்டிப்பாக அதிர்ஷ்டம் பெறுவீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆவணங்களை முடிப்பது, கையெழுத்துப் போடுவது, வராத பணம் வந்து சேருவது, கோர்ட் வழக்குகள், மற்றவர்கள் கொடுக்க வேண்டிய பணம் போன்றவை கிடைக்கும் யோகம் ஏற்படும்.

செழிப்பாக இருக்கும் காலகட்டம். குரு வக்கிரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் காசு பணத்திற்குப் பிரச்சனையே இருக்காது. அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய், சனி பார்வையில் அமர்ந்திருப்பதால் பயணங்களின்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும், மனைவியாக இருந்தால் கணவன் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சூரியன் செவ்வாய் இரண்டும் நேரடியாக உங்கள் ராசியை பார்க்கிறார்கள். ராசி, லக்னத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். இது நல்ல அமைப்பு கிடையாது. வம்பு, வழக்குகள் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகம் இருக்கும். உறவுகளிடையே பிரிவுகள் ஏற்படலாம்.

மன சஞ்சலங்கள், கவலைகள் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். உத்யோகம், தொழில் தொடர்பாக வெளியூர், வெளிநாடுகளில் சிறிது காலம் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும். எனவே யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், முயற்சிகளில் இழுபறி ஏற்படும். புதிய முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்படும்.

வாழ்க்கை துணை ஆரோக்கியம், இரண்டாம் குழந்தையின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூளை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்த பிரச்சனைகள் இருப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சின்ன பிரச்சனை என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கும். கழுத்து வலி, சுழுக்கு, இளைய சகோதரன் வழியாக டென்சன், குடும்பத்திற்கு இடையூறு, உங்களை் மனதைப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் செயல்படுவது போன்றவை ஏற்படும். பாக்கியத்தில் இருக்கும் குரு உங்களுக்கு வக்கிரமாக 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கிடைக்காமல் போன வாய்ப்புகள், விஷயங்கள் எல்லாமே அடுத்தடுத்து நடக்கும்.

பேசிப் பேசியே வார்த்தையால் காரியங்களை சாதிப்பீர்கள். புதன், சுக்கிரன் இணைவதால் முக லட்சணத்தை அதிகரிக்கும். திரிகோணத்தில் சனி அமர்ந்திருப்பதால் பெரிய பெரிய வாய்ப்புகள் தேடி வரும். பிரம்மாண்டமான வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுக்குப் பஞ்சமே இருக்காது. வாழ்க்கைத் துணையின் மூலம் பெரிய வெற்றி, நல்ல லாபங்கள் அனைத்தும் கிடைக்கும்.

பெண்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் அடுத்தடுத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு கழுத்து, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். குருவாயூர் கிருஷ்ணரை தெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி லாப ஸ்தானத்தைப் பார்க்கிறது. நண்பர்கள் மூலம் இழப்புகள் ஏற்படும். கால் முட்டியில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக பிரச்சனைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு வக்ர நிவர்த்தியாவதால் ஒரு விதத்தில் நன்மையும், ஒரு விதத்தில் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

பழைய விஷயங்கள், பழைய கர்மாக்கள் அனைத்தும் சரியாக நடக்கும். புதிய கர்மாக்களை செய்யும் போது தர்மத்திற்கு மீறி சில விஷயங்கள் நடக்கும். மற்றவர்களால் மன அழுத்தம், அறுவை சிகிச்சை செய்வது, மூத்த அண்ணன் பிரச்சனை செய்வது, நண்பர்களுக்கு பணம் கொடுத்து சிக்குவது போன்ற பாதிப்புகளைச் சந்திப்பீர்கள்.

குரு வக்கிரமாக இருப்பதால் யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்கிற குழப்பம் ஏற்படும். 2 ஆம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால் எந்த விஷயத்தை பேசலாம் வேண்டாம் என்கிற குழப்பம் ஏற்படும். பண விஷயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இருக்காது. நிறைய பேருக்கு அரசியல் பதவிகள் கிடைக்கும். நிறைய பிரஷர் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+