தனுசு ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. ஆடி மாதத்தில் வரப்போகும் ஆபத்துகள்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு ஆடி மாத பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. 6 ஆம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பார்வை பலத்தை தரப் போகிறார். 6, 4, 1, 7 ஆம் இடம் இயங்கப் போகிறது. இனி பிரம்மாண்ட வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு இணக்கமான சூழல் ஏற்படும். வீட்டுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அனுசரித்துச் செல்வது நல்லது.
வேலையில் தடை, முன்னேற்றம்
தாயுக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாயிடம் வம்பு வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையில் இருந்த தொய்வு நிலை மாறும். ஏற்கனவே இருக்கும் வேலையை விடுவது, புதிய வேலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேலையில் தடை அல்லது முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 6, 1 ஆம் இடம் இயங்கும்போது தேவையில்லாத கடன், வம்பு, வழக்கம், அசிங்கம், எதிரி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வீடு, நிலம்
நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள் எதிரியாக மாறுவார்கள். உடம்பு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குருவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளதால் தனுசு ராசி ஆண்களுக்கு நன்றான காலமாக இருக்கும். தாயின் உடல்நிலை கவனம் தேவை. நிலம் வாங்குவது, விற்பது, புனரமைப்பது தொடர்பான சிந்தனைகள் வரும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை உண்டாகும். வீட்டை, பீரோவை சுத்தம் செய்வீர்கள். அம்மாவுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத சோம்பல்கள், சோம்பேறித்தனம் ஏற்படும்.
முன்னேற்றம்
பொறுப்புகளை சுமக்க தயங்கும் காலகட்டமாக இருக்கும். 7 ஆம் வீட்டு அதிபதி 8 இல் அமர்ந்துள்ளார். வார்த்தைகளால் காயப்படுத்துவதற்கு, காயமடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தகவல் தொடர்புத் திறன் அதிகரிக்கும். உங்கள் அங்கீகாரத்தை தேடி பயணிப்பீர்கள். நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களுக்கான அடையாளம் கிடைக்கும். நல்ல முன்னேற்றமான காலம் உங்களைத் தேடி வரப்போகிறது.
கவனம்
20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நிறைய வம்பு, வழக்குகள் வந்து சேரும். நண்பர்களுக்காக கோர்ட், கேஸ் என செல்வது, விதிமுறைகளை மீறி அரசிடம் சிக்குவது போன்ற விஷயங்களில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தாய்க்கும், உங்களுக்குமான வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
அனுமன் வழிபாடு மிகச்சிறந்த ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கம். அனுமனுக்கு வடமாலை சாற்றி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மன உறுதி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும்.












Click it and Unblock the Notifications