தனுசு ராசிக்கு குரு, சுக்கிரன், ராகுவால் வரும் குட் நியூஸ்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் நேரம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

dhanusu-aadi-month-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-people-in-the-month-of-aadi

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.

மிதுன மனைவியில் குரு பகவான் இருக்கிறார். கன்னி மனையில் செவ்வாய் பகவான் ஆடி 12 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சியாகிறார். சூரிய பகவான் கடக மனையில் இந்த மாதம் முழுதும் அமர்ந்து கொண்டு பலனை கொடுக்கப் போகிறார். கேது பகவான் சிம்மத்திலும், ராகு கும்பத்திலும் உள்ளது. சனி பகவான் வக்கிரமடைந்து மீன மனையில் இருக்கப் போகிறது.

அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 சுபர்கள் வலுத்து ராசியைப் பார்க்கின்றனர். 7 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து ராசியைப் பார்க்கின்றனர். அதேபோல, 3 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் ராகு இருப்பது அருமையான நல்ல அமைப்பாகும். முயற்சிகள் அனைத்துமே வெற்றியடையும்.

முயற்சிகளில் வெற்றி

நல்ல அறிமுகங்கள் உங்களுக்கு கிடைக்கும். 8 ஆம் இடத்தில் பாக்கியாதிபதி மறைந்தாலும் கூட பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. மூன்றாம் இடத்தில் குருவின் பார்வையில் ராகு இருப்பதால் புதிய அறிமுகங்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலுமே வெற்றி காணும் யோகம் உண்டாகும். அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சர்கள் போன்றோரை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களைத் தேடி அவர்கள் வரும் யோகம் ஏற்படும்.

யோகம்

சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களுக்கு சிறிய உதவிகளைச் செய்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆடி மாதத்தில் அற்புதமான யோகங்களைப் பெறுவீர்கள். கடந்த ஒரு வருடமாக கடன், நோய், எதிரியால் பாதிக்கப்பட்டு வந்த தனுசு ராசிக்கார்களுக்கு அதற்கான நிவர்த்தி ஏற்படும். பிரகாசமான காலகட்டமாக உங்களுக்கு அமையும்.

கடன் நீங்கும்

இதுவரை இருந்து வந்த கடன் தொந்தரவுகள் அனைத்தையும் தீர்த்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல மருந்துகளும், மருத்துவரின் ஆலோசனையும் கிடைக்கும். நிறைய குழப்பமான விஷயங்கள் அனைத்தும் நீங்கி இனி எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்று சிந்திக்கும் யோகம் பொருந்திய மாதமாக இருக்கும்.

தந்தையுடன் முரண்பாடு

8 இல் சூரியன் வலுத்துள்ளதால் தந்தையுடன் சிறிது முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவை பிரிந்திருக்கும் அமைப்பு, அப்பாவின் உடல்நிலையில் பிரச்சனை போன்ற பல்வேறு விதமான கவலைகள் வந்து போகும். தந்தையின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். சிலருக்கு தந்தையின் சொத்துக்கள் குறித்த கலக்கங்கள் ஏற்படும். மற்றபடி 70 சதவீதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு கட்டாயமாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+