Dhanusu: தனுசு ராசியின் ஆசை எல்லாம் நிறைவேறப் போகுது.. குருவால் வரப்போகும் சூப்பர் லக்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் தனுசு ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
தனுசு
தனுசு ராசி மற்றும் தனுசு லக்னத்தினருக்கு ராசியின் அதிபதியான குரு பகவான் வக்கிரமாகப் போகிறார். உச்சம் பெற்ற கிரகம் வக்கிரகதி அடையும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய தேவைகள், குடும்பத் தேவைகள், சுய தேவைகளை 11 ஆம் தேதிக்கு முன்பு வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியம், உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக சிகிச்சைகளை 11 ஆம் தேதிக்கு முன்பு செய்து கொள்வது நல்லது.
குரு பார்வை
குரு பார்வை 2 ஆம் இடத்தில் பார்ப்பதால் தன வரவு, பொருளாதாரம் நன்றாக இருக்கும். 11 ஆம் தேதிக்குப் பிறகு செய்யும் போது நீங்கள் செய்யும் காரியங்கள் மெதுவாக நடக்கும். நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்கிர நிவர்த்தியாவதால் முழுக்க முழுக்க யோகங்களை வாரி வழங்குவார். செல்வத்தை அள்ளிக் கொடுப்பார். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் 28 ஆம் தேதிக்கு முன்பே உங்கள் வேலைகளை செய்து கொள்வது நல்லது.
யோகம்
28 ஆம் தேதிக்குப் பிறகு பணம்,பொருளாதாரம், வெற்றி சார்ந்த விஷயங்கள் எல்லாம் சனி வக்கிரமில்லாத ஜாதகத்துக்கு மீண்டும் யோகம் உண்டாகும். 5, 12 ஆம் அதிபதியானவர் 12 ஆம் இடத்திலேயே இருக்கிறார். குரு பார்வையில் இருப்பதால் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். இதனால், குழந்தைகளின் தேவை, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிநாடு வேலை கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பயணங்களை செய்வீர்கள். கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடம்பில் இருந்த வலிகள் அனைத்தும் நீங்கும். 6, 11 ஆம் அதிபதியாகிய சுக்கிரனும் தன்னுடைய சொந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்துடன் அமர்ந்திருக்கிறார். இது மிகப்பெரிய யோகமாகும். லாபத்தை அள்ளிக் கொடுப்பார். உங்களுடைய கடன்களை எல்லாம் அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வேலைவாய்ப்பு
எதிர்பார்க்காத வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். இருக்கின்றன இடத்திலேயே நல்ல சம்பளம், அல்லது வேறு வேலைவாய்ப்பு நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான தொழில்களை செய்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். புதனும், சுக்கிரனும் சேர்வது லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்கும்.
வீடு, மனை யோகம்
தொழில் நன்றாக இருக்கும். நல்ல மனை அமையும், எதிர்பார்த்த மனைவி, கணவர் அமைவார்கள். திருமணம் சார்ந்த விஷயங்கள், சுப காரியங்கள் நடக்கும். அப்பா, அப்பாவின் தேவைகளை நவம்பர் 16 ஆம் தேதிக்கு முன்பு வைத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து மேலே வருவீர்கள். தொழில் நன்றாக இருக்கும். வருமானம், லாபம் உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் கட்டாயம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications