Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரிசை கட்டி நிற்கும் யோகங்கள்.. பேச்சில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். புதிய முயற்சிகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.
மனஅழுத்தம் நீங்கும்
மன அழுத்தங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாக தெளிவடைவீர்கள். பதட்டம், பயத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நரசிம்மர் கவசத்தை சொல்லி வருவது ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம், லாபம் ஏற்படும். வியாபாரம் ரீதியாக ஏற்றம் ஏற்படும்.
பொருள்கள் சேர்க்கை
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய பொருள்கள் கிடைக்கக் கூடிய பாக்கியம் ஏற்படும். மன நிறைவு தரும் காலகட்டம். வாகனம் தொடர்பான விஷயங்களில் இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். செல்வாக்குகள் கூடும்.
தைரியம்
அடுத்தகட்டத்துக்கு முன்னேறிச் செல்வீர்கள். தைரியம் ஏற்படும். வேற்று மொழி பேசும் நபர்களால் உங்களுக்கு கண்டிப்பாக ஆதாயம் ஏற்படும். தொலைதூர தொடர்புகள் மூலமாக அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் துணையுடன் மனம் விட்டுப் பேசி உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள், முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications