தனுசு ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம்.. என்ஜாய்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு 5க்கு உரியவர் செவ்வாய் பகவான். யோகத்தைக் கொடுக்கக் கூடியவர், பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், காதல் ஸ்தானத்துக்கு உரியவர் செவ்வாய் பகவான். விரையத்தைக் கொடுப்பவரும் செவ்வாயே. உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல வேலை, பட்டம், பதவி கிடைக்கும். அதிகாரத்துடன் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பூர்வ புண்ணியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்க்கக்கூடிய காலமாக அமையும். பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
சகோதர வகையில் மேன்மை உண்டாகும். அவர்களுடன் சுமூகமாக செல்லக்கூடிய காலமாக இருக்கும். பட்டம், பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும். பதவி மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நல்ல கெளரவம் கிடைக்கும். நீங்கள் யாரென்று தெரியப்படுத்தக் கூடிய நேரமாக இருக்கும். லக்கினாதிபதி குரு பகவான் லக்னத்தை பார்ப்பதால் அனைத்து விஷயங்களும் அற்புதமாக இருக்கும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும்.
குலதெய்வம் தொடர்பான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சீருடை அணிந்து பணியாற்றும் துறையில் இருப்பவர்கள், அரசுத் துறை, அரசாங்க வேலையில் இருப்பவர்கள், அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, அரசுத் துறை ஒப்பந்தங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள், தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
தொழிலை வெளி மாநிலத்துக்கு, வெளிநாட்டுக்கு விரிவுபடுத்துவதற்கான சிந்தனைகள் உங்களுக்கு வரும். வெளிநாட்டில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு பிஆர் பெறுவதற்கான காலகட்டம் இது. ஐடி துறையில் இருப்பவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் உத்திரம் நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பயணிக்கும்போது அற்புதமான பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தன பாக்கியம், பதவி பாக்கியம், திருமண பாக்கியம் என அனைத்து பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
அரசு விஷயங்களில் ஏற்றம்
அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய இடமாற்றம் கிடைக்கும். அரசாங்கம் சார்ந்த அனுகூலம் ஏற்படும். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலகட்டமாக இருக்கும். தந்தை மூலமாக ஆதாயங்கள், அனுகூலம் ஏற்படும். செவ்வாய் சந்திரனின் நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது அலைச்சல், கோபம், மன அழுத்தம் உண்டாகும். மனம் சஞ்சலப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
நிலம், வீடு, இடம் வாங்கும் யோகம்
வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். வலிகளோடு இருக்கும் விஷயங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது பட்டம், பதவி, புகழ் கிடைக்கும். சுய கெளரவம் மேம்படும். உங்களுக்கு பெருமை சேரும். குழந்தைகளால் அனுகூலம், ஆதாயங்கள், படிப்பு சார்ந்த விஷயங்களின் நன்மை ஏற்படும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நிலம், வீடு, இடம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
விளையாட்டுத் துறையில் ஜொலிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கலைத் துறையில் சாதிப்பீர்கள். கலைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். அதிரடி திருப்பங்கள் உண்டாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான மாற்றங்களும், ஏற்றங்களும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications