Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழரை சனி... குரு மங்கள யோகம்....சனி திசையில் தமிழிசை சவுந்தரராஜனை தேடி வந்த பதவி

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்து இப்போது தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் பிறந்து பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தில் வளர்ந்து பாஜகவில் இணைந்து

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தெலுங்கானா ஆளுநராக நியமணம்... தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள்

    சென்னை: ஏழரை சனி இரண்டாம் சுற்று நடக்கும் போது பதவிகள் பட்டங்கள் தேடி வரும் என்பார்கள் செல்வம் செல்வாக்கு கூடும் என்று கூறுவார்கள். உத்திராடம் நட்சத்திரம் மகர ராசியில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு இப்போது ஏழரை சனியின் இரண்டாம் சுற்று நடக்கிறது. கூடவே சனி திசையும் நடப்பதால் அவருக்கு உயரிய பதவி தேடி வந்துள்ளது என்று அவரது ஜாதகம் சொல்கிறது. ஜாதகத்தில் உள்ள குரு சந்திர சேர்க்கை, குரு செவ்வாய் பார்வையால் மேன்மையான நிலை மேதகு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. இனி வரும் காலமெல்லாம் அதிர்ஷ்டமே.

    தமிழிசை சவுந்தரராஜன் பிறந்து வளர்ந்தது பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பம். அவரது ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால்
    துலாம் லக்னம். மகர ராசி ராசியில் சந்திரன், குரு, சனி, கும்பத்தில் கேது, மேஷத்தில் சுக்கிரன், ரிஷப சூரியன், மிதுனத்தில் புதன், கடகத்தில் செவ்வாய் சிம்மத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

    தமிழிசை சவுந்தரராஜனின் ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. குரு சந்திர யோகம், சந்திர மங்கள யோகம், நீச பங்க ராஜ யோகம், ரவி யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் உள்ளன.

    உயர்ந்த பதவி

    உயர்ந்த பதவி

    தமிழிசை ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டு புறமும் சுக்கிரன், புதன் என சுப கிரகங்கள் அமைந்திருப்பது ரவி யோகமாகும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் இந்த யோகம் உடையவர்கள் புகழ், கல்வி, உயர்ந்த பதவி கிடைத்து சாதனையாளராக திகழ்வார்கள்.

    செல்வம் செல்வாக்கு

    செல்வம் செல்வாக்கு

    சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்வது சந்திர மங்கள யோகம். இந்த யோகம் உடையவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராகவும் புகழ் உடையவராகவும் இருப்பார். தமிழிசைக்கு சிறு வயதில் இருந்தே செல்வமும் செல்வாக்கும் கிடைத்துள்ளது.

    லட்சுமி யோகம்

    லட்சுமி யோகம்

    ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் ஆட்சி பெற்று அமர்வது லட்சுமி யோகம். அந்த கிரகத்தின் தசை நடைபெறும் போது லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வம் செல்வாக்கு உயரும். சந்திரன், குரு இருவரும் சேர்ந்திருப்பது குரு சந்திர யோகம் எனப்படும். இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெற்றவர்கள் பேரும் புகழும், தாயின் முழு அன்பும் பெறுபவர்கள் ஆவார்கள். தமிழிசையின் ஜாதகத்தில் மகர ராசியில் குரு நீசம் பெற்றிருந்தாலும் கூடவே சனி இருக்கிறார் நீச பங்க மடைந்துள்ளார் குரு. கூடவே சந்திரன் இணைந்து குரு சந்திர யோகத்தை பெற்றுள்ளார்.

    தேடி வந்த பதவி

    தேடி வந்த பதவி

    தமிழிசை சவுந்தரராஜன் சூரிய தசையில் பிறந்திருக்கிறார். சந்திர தசை, செவ்வாய் தசை, ராகு திசை, வியாழன் திசை முடிந்து இப்போது சனி திசை புதன் புத்தி நடக்கிறது. அவரால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயித்து பதவியில் அமர முடியவில்லை. அவரது ஜாதகத்தில் பல்வேறு யோகங்கள் இருந்தாலும் எட்டாம் அதிபதி சூரியன் மறைவு பெற்றுள்ளார். அதுவே அவரது வெற்றியை தடுத்து வந்தது. இப்போது இரண்டாவது சுற்று ஏழரை சனி, சனி திசை புதன் புத்தியில் மிக உயரிய பதவியான ஆளுநர் பதவி தேடி வந்திருக்கிறது.

    சந்திரன் சூரியன்

    சந்திரன் சூரியன்

    சனி பகவான் துலா லக்ன காரர்களுக்கு யோகாதிபதி என்பதால் ஏழரை சனி சனி திசையில் அவருக்கு உயரிய பதவி தேடி வந்திருக்கிறது.
    சந்திரன் நட்சத்திரத்தில் சூரியனும், சூரியன் நட்சத்திரத்தில் சந்திரனும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர். 18 வருட போராட்டங்களுக்குப் பிறகு காத்திருப்புக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. குரு சந்திர சேர்க்கை, குரு செவ்வாய் பார்வையால் மேன்மையான நிலை மேதகு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. இனி வரும் காலமெல்லாம் அதிர்ஷ்டமே.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+