Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. வார்த்தையில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்கள் கேட்டுவிட்டு சென்றுவிடுவார்கள், இறுதி வரை துணை தான் கடைசி வரை இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கணவர், மனைவியிடம் இணக்கமாகச் செல்வது நல்லது.
தொழில்
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், உத்தியோம், வியாபாரம், படிப்பு, குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாகப் பயன்படுத்துவதைக் கடைப்பிடிப்பது நல்லது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும்.
அனுகூலம்
வேற்று மொழி மனிதர்கள் ஆதாயம் உண்டு. வாகனம் தொடர்பான விஷயங்களில் அதீத முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள், உறவுகள் விஷயத்தில் மேன்மை ஏற்படும். குலதெய்வக் கோயில்களுக்குச் செல்லும் யோகம் உண்டு. அதிகளவில் நன்மைகள் உண்டாகும். நரசிம்மர் கவசம் கேட்பது, படிப்பது பெரிய அதிர்ஷ்டம் பெறும் யோகம் உண்டு.
லாபம் கொட்டும்
தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் நல்ல வெற்றி, லாபம் ஏற்படும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சளி, இருமல் தொடர்பான விஷயங்களில் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்வது நல்லது.
கவனம்
உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து துறைகளிலும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் சுற்றுலா, கோயில், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் சூழல் அமையும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நன்மையைக் கொடுக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications