குருவின் அருளால் கும்ப ராசிக்கு பிரம்மாண்டமான மாற்றம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் நேரம்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், கும்பம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-kumbam-rasi-people-get-during-this-period

கும்ப ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். கும்ப ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசியினருக்கு அற்புதமான மாற்றங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய நல்ல காலகட்டம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகக் கூடிய காலகட்டம். 7 ஆம் இடத்துக்கு குரு பகவான் வந்து பார்வை பலத்தை நேரடியாக லக்னத்துக்கு கொடுப்பதால் பெரிய மாற்றம் ஏற்படும். நிறைய பேருக்கு திருமணம், மறுமணம் ஆகக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு பார்வை

விமானத்தில் செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம், கெளரவம் கிடைக்கும். லக்னத்குக்கு குரு பார்வை வருவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். பெரும் மாற்றமும், முன்னேற்றமும் வரும். சண்டை, சச்சரவுகள், பிரச்சனைகள் என தேவையில்லாத பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். நண்பர்களால் பெரிய பாதிப்புகள் வந்திருக்கும்.

வேலையில் கவனம்

இனிமேல் அந்த நிலைமைகள் எல்லாம் மாறி உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். தொழில் ஆரம்பிப்பீர்கள். வேலை கண்டிப்பாக கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை, கெளரவம் அதிகரிக்கும். முகத்தில் வந்திருந்த தேமல்கள் எல்லாம் நீங்கு வசிகரமாகும். காதல் கண்டிப்பாக கைகூடும். நிறைய விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

பதவி உயர்வு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். சகோதர, சகோதரர்கள், நல்ல நட்புகள் கிடைக்கும் காலகட்டம். 10 பேர் உங்களுக்கு உதவி செய்வது, ஆதரவாக இருப்பது கண் கூடாகத் தெரியும். உங்கள் மேல் இருந்த அவப்பெயர், அவச்சொல் நீங்கும்.

யோகம்

மன அழுத்தம் தீரும். நிம்மதியான தூக்கம் ஏற்படும். அடுக்கடுக்கான நல்ல விஷயங்கள் நடக்கும் யோகம் உள்ளது. 84 நாட்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய யோகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு முடி கொட்டுவது, தோல் பிரச்சனை, தலை சுற்றுவது, நரம்புகள் பாதிப்புகள் கொடுப்பது போன்ற அமைப்பு உள்ளது. உங்களுக்கு அசிடிட்டி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

சாரங்கபாணி சுவாமியை வழிபாடு செய்வது, வீர ராகவப் பெருமாள் கோவிலுக்கு நெய் தானம் செய்வது நன்மை பயக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பழைய கடன்கள் குறையும். திருமண யோகம் ஏற்படும். வேலையில் உயர்வு ஏற்படும். நல்ல முதலீடுகளைச் செய்வீர்கள். வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த அதிசாரப் பெயர்ச்சி உங்களுக்கு கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+