Guru Adhisara Peyarchi: சிம்ம ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்.. லட்சியம் நிறைவேறப் போகுது

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், சிம்மம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-simmam-rasi-people-get-during-this-period

துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் அற்புதமான யோகங்கள் கிடைக்கும் காலகட்டம். நிறைய நன்மைகள் எடுக்கக்கூடிய காலகட்டம். 6 வருடங்களாக வாழ்க்கையில் பின்தங்கியிருந்த சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தரும்.

குரு பார்வை

குரு பார்வையில் பஞ்சம ஸ்தானம், 7 ஆம் இடம், பாக்கிய ஸ்தானம் இயங்குவதால் அடுத்த 3 மாதத்தில் நிச்சயமாக திருமணம் நடக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

லட்சியம் நிறைவேறும்

சொந்த வீடு யோகம், திருமணம் செய்வது, சொந்த தொழில் தொடங்குவது, பார்ட்னர்ஷிப் அமைப்பது என உங்களுடைய லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய காலகட்டம். ராசி, லக்கினத்துக்கு குரு வரும்போது தலை, இதயம், கொழுப்பு, கண், இடுப்பு பகுதிகளில் வரும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அடுத்த 3 மாதங்களுக்கு ராஜகணபதி கோயிலுக்கு தினந்தோறும் அபிஷேகத்திற்கு கொடுப்பது நன்மையைத் தரும்.

புதிய வேலை

உங்களுடைய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். வேலைவாய்ப்புக்கான அப்பாயின்மென்ட் லெட்டர் கண்டிப்பாக கிடைக்கும். புதிய வீடுக்கு கிரஹப்பிரவேஷம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். காதல் கைகூடக்கூடிய அற்புதமான காலகட்டம்.

வழிபாடு

குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அடுத்த 3 மாதத்திற்கு நிறைய யோகங்கள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜகணபதி கோயிலுக்கு அபிஷேகம் கொடுப்பது, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது சகலவித நன்மைகளைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+