பெங்களூருவில் இனி வாலாட்ட முடியாது.. 5 போலீஸ் கமிஷனர்கள் – தலைமை காவல் ஆணையர் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூருக்கு 5 காவல் ஆணையர்கள் மற்றும் அவர்களை கண்காணிக்க ஒரு தலைமை காவல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

பெங்களூர் நகரில் ஒரு காவல் ஆணையர், 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 11 சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர்கள், 4 போக்குவரத்து துணை காவல் ஆணையர்கள் செயல்பட்டு வந்தனர். இதனை மாற்றம் செய்ய கர்நாடகா அரசு முடிவெடுத்தது.

Bengaluru police commissioner police

பெங்களூர் நகரில் குற்றங்களை குறைக்க காவல் ஆணையர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தவும், ஒரு தலைமை காவல் ஆணையர் நியமனம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா அமைச்சரவை அக்டோபர் 6ம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதுமட்டுமின்றி தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர்களின் எண்ணிக்கையை 14 ஆகவும் உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் நேற்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி பெங்களூரிலும் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 5 காவல் ஆணையர்கள், ஒரு தலைமை காவல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* பெங்களூர் நகரின் காவல் ஆணையராக செயல்பட்டு வந்த சீமந்த் குமார் சிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநில தீ ம்றும் அவசர சேவைகள் பிரிவின் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பணி மாற்றத்தை தொடர்ந்து பெங்களூருவிற்கு ஒரு காவல் ஆணையர் என்ற நடைமுறை முடிவுக்கு வந்தது. பெங்களூர் நகர தலைமை காவல் ஆணையர் பதவி நடைமுறைக்கு வந்தது.

* சீமந்த் குமார் சிங் பணி இடமாற்றத்தால் அவருக்கு பதில் பெங்களூர் நகர தலைமை காவல் ஆணையராக ஹிதேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 1996ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளார். இதன்மூலம் அவர் பெங்களூர் நகரின் முதல் தலைமை காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.

* அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட 5 காவல் ஆணையர் பதவிகளுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி பெங்களூர் சென்ட்ரல் காவல் ஆணையராக 2004 பேட்ச்சை சேர்ந்த லாபுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பெங்களூர் கிழக்கு காவல் ஆணையராக பிஎஸ் ஹர்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் 2004 ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்.

* பெங்களூர் மேற்கு காவல் ஆணையராக விகாஷ் குமார் விகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவரும் 2004 ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்.

* அதேபோல் 2008 பேட்ச்சை சேர்ந்த போரலிங்கய்யா பெங்களூர் வடக்கு காவல் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

* வம்சி கிருஷ்ணா பெங்களூர் தெற்கு காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர் 2008 பேட்ச்சை சேர்ந்தவர்.

* அதேபோல் 1998 பேட்ச்சை சேர்ந்த ஹேமந்த் குமார் நிம்பால்கர் பெங்களூர் நகரின் போக்குவரத்து பிரிவுக்கான முதல் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இந்த பொறுப்புடன் ரவுடிகளுக்கு எதிரான Anti rowdy Squad-ன் காவல் ஆணையராகவும் செயல்பட உள்ளார்.

* அதேபோல் பெங்களூர் நகரில் சென்ட்ரல் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரா நகர் மண்டல சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையராக 2014 பேட்ச்சை சேர்ந்த சென்னபசவண்ணா லங்கோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

* சென்ட்ரல் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காந்திநகர் மண்டல துணை காவல் ஆணையராக 2020 பேட்ச்சை சேர்ந்த லட்சுமி கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பெங்களூர் வடக்கு காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட யஷ்வந்தபுரா மண்டல சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையராக 2015 பேட்ச்சை சேர்ந்த நாகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மேற்கு காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பீனியா துணை காவல் ஆணையராக 2014 பேட்ச்சை சேர்ந்த அசோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+