குருப்பெயர்ச்சி: துலாம், தனுசு ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. அடிச்சது ஜாக்பாட்
குருப்பெயர்ச்சி பலன்: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம், தனுசு ராசியினருக்கு குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கப் போகிறது. என்ன விதமான பலன்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியானது மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபத்தில் இருந்து குரு பகவான் மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். குரு பகவான் தனது சொந்த வீட்டையே பார்ப்பது தான் இந்த குருப்பெயர்ச்சியில் விசேஷம்.

இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம், பொருளாதாரம், செல்வம், உயர்வு என அனைத்து விதமான நற்பலன்களையும் சில ராசிகள் பெறப் போகின்றன. அந்த வகையில், துலாம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆம் இடத்தில் குரு ராசியைப் பார்க்கிறார். 1, 3, 5, 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் முயர்சிகளில் அதிர்ஷ்டம் உண்டாகும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஜாக்பாட்டான காலகட்டமாக இருக்கும். 9 இல் குரு வருவதால் உங்களுடைய வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும். வேலை வேலை என்று ஓடிக் கொண்டே, முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். வளர்ச்சியை நோக்கி பயணிப்பீர்கள்.
பொருளாதாரம், பணம், சேமிப்பு எல்லாவற்றிலும் குருவின் ஆசிர்வாதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் கைகூடி வரும். தந்தையாரின் உடல் நிலையில் உள்ள பிரச்சனை, பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மன நிறைவான காலகட்டமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு குருவின் பார்வை நேரடியாக உள்ளது. 11, 3, 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண யோகம், மறுமண யோகம் உண்டாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சம்மந்தியாகும் யோகம் உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். அதன் மூலமாக சந்தோஷம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி, விஸ்வரூப வெற்றி அடைவீர்கள்.
இலக்கை நோக்கி, லட்சியத்தை நோக்கி பயணிப்பீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். லாபம் லாபம் என அனைத்திலும் லாபம் காண்பீர்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகம் அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications