குருப்பெயர்ச்சி: தனுசின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் ஹிட்டு, அதிர்ஷ்டம்.. குஷியான காலகட்டம்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின்படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

guru-peyarchi-dhanusu-rasi-palan-you-can-learn-about-the-benefits-of-guru-peyarchi-for-dhanusu-sag

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூஜைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின்படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.

மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். விஷ்ணு காயத்ரி, விஷ்ணு சகஸ்கர நாமம் பெரிய அளவுக்கு அனுகூலத்தை தரும். வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரவத்தில் கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் உடற்பயிற்சி, தலையணையை வைத்துக் கொள்வது நல்லது.

குருவானவர் சமசப்தமாக 7 ஆம் இடத்துக்கு வருகிறார். தைரியம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். அர்த்தாஷ்டம சனி 4 இல் இருப்பதால் தாய் வழி, தந்தை வழி, உறவினர்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செல்வது நல்லது. துணை விஷயத்தில் அந்நியர் தலையீடு, பிறர் தலையீடு, உறவினர் தலையீடு, நண்பர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் வெள்ளைக் கொடி காட்டுவது நல்லது. லாபம், அனுகூலம் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் புத்திர சந்தானத்தில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். நீங்கள் இருக்கக்கூடிய வீட்டில் ஒன்றன்பின் ஒன்றாக நல்லது ஏற்படும். தெய்வ காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

லாபத்தின் அமைப்பு எதிர்பார்க்காத வகையில் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். செல்வாக்கு கூடும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நல்ல நட்பு உருவாகும். எல்லா நட்புகளும் இதுவரை பயன்படுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். அந்த நிலை மாறும். உங்கள் மேல் அக்கறையாக நண்பர்கள் இனி இருப்பார்கள். எது சொன்னாலும் உங்களுக்கு உறுதியாக இருப்பார்கள்.

நல்ல வேலையாட்கள், முதலாளிகள், மேலதிகாரிகள் கிடைப்பார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல நிலையாக இருக்கும். மன நிம்மதி ஏற்படும். அக்கறை கொள்ளக் கூடிய துணை கிடைக்கும். துணை குறித்து நீங்கள் புரிந்து கொள்ளும் காலகட்டமாக இருக்கும். குரு எல்லாவிதமான ஏற்றத்தையும், அஷ்ட லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கப் போகிறார். 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ராகு 3 ஆம் இடத்தில் இருப்பதால் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமை அன்று பசு மாட்டுக்கு உணவளிப்பது நல்லது. கோதுமை தவிடு, வெல்லம், கோதுமை மாவு வெல்லம், கோதுமை சப்பாத்தி வெல்லம் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். இதனை தானமாக கொடுக்க கொடுக்க குடும்பத்தில் நல்ல யோகம் அனுகூலம் பெரிய நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகமாகப் பார்க்கக்கூடிய ராசி நீங்கள்தான். அதே நேரம், கணவன் மனைவிக்குள் சண்டை இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+