Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி பலன் 2025: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கான பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

guru-peyarchi-find-out-what-kind-of-benefits-and-remedies-for-mesham-to-meenam-people-during-this-g

மேஷம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். மூன்றாவது இடம் என்பது உபஜெய ஸ்தானம். இது உத்யோகம், தொழில், கல்வி எல்லாவற்றிலும் வெற்றியை கொடுக்கும். குரு பார்வை 7, 9 ஆகிய இடங்களில் விழுவதும் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும். குரு பார்வை லாபத்தில் இருப்பதால் லாபம் பல மடங்கு உயரும். காது, மூக்கு, தொண்டை, கழுத்து, மார்பகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மட்டும் எச்சரிக்கை வேண்டும்.

ரிஷபம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம் மதிப்பு உருவாகும். பண வரவு திருப்தியாக இருக்கும். குரு பார்வை 6, 8,10 ஆகிய வீடுகளில் விழுவதால் சிறப்பான பலன்களும், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது உகந்த நேரம். வார்த்தைகளில் மட்டும் கவனம் தேவை.

மிதுனம்

குரு பகவான் உங்கள் சொந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். கடந்த கால பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரப் போகின்றன. மிதுன ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. உண்டாகும். நரம்பு, ரத்தநாளம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். உத்யோகம், தொழிலில் நிச்சயம் மாற்றம் இருக்கும். பலருக்கு சொந்த வீடு கனவு நனவாகும். சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கை துணையால் லாபம் ஏற்படும். குரு பார்வை 6 இடத்தில் விழுவது நல்ல அமைப்பு. பணம் சார்ந்த விஷயடகளில் அதிக கவனம் தேவை. யாரையும் நம்பி சிபாரிசு செய்ய வேண்டாம். புதிய முதலீடுகளுக்கு இது ஏற்ற காலம் இல்லை. ஆன்லைன் மோசடியில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சிம்மம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இது அற்புதமான அமைப்பு. அஷ்ட சனியின் தாக்கத்தை குறைத்து, நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை தேடித்தருடம். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். உத்யோகம், தொழிலில், கல்வியில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். குரு பகவான் 3 ஆம் இடத்தை பார்ப்பதால் ஆவணங்கள் சார்ந்த பிரச்னைகள் தீரும்.

கன்னி

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். குருவின் பார்வை 2, 4, 6 இடங்களில் விழுகிறது. பல்வேறு பிரச்னைகளை கடந்து பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த மன சஞ்சலங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப விவகாரத்தில் மட்டும் சற்று கவனம் வேண்டும். கணவன் - மனைவி மோதலை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

துலாம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். குரு பகவான் ஐந்தாம் இடத்தையும் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிரிகள் பலவீனமாவார்கள். வருமானம் உயரும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் சுமை குறையும். உங்களின் ஆவணங்களை கையாள்வதில் கூடுதல் கவனம் வேண்டும்.

விருச்சிகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கிருந்து 2, 4, 12 இடங்களை குரு பகவான் பார்க்கிறார். சுப விரய செலவுகள் அதிகரிக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம் உள்ளிட்டவை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. மனதில் தெளிவு பிறக்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் பெயர், புகழ், மரியாதை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கை அவசியம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும்.

தனுசு

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். குருவின் பார்வை நேரடியாக விழுவதுடன், 11, 3, 7 ஆகிய இடங்களிலும் குரு பார்வை விழுகிறது. லாபம் பல மடங்கு உயரும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி என்று அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இரவு நேர பயணங்கள், வண்டி, வானங்களை இயக்கும்போது கவனம் அவசியம்.

மகரம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். 2 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். உங்களின் உழைப்பு, திறமையின் மூலம் வாழ்க்கையில் பல மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக்க கூடிய அமைப்பு உண்டாகும்.

சுப விரய செலவுகள் ஏற்படும். தடைப்பட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய கடன்கள் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நரம்பு, முதுகு தண்டுவடம், கழுத்து வலி, அடி வயிறு போன்ற பிரச்னைகளில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டாகும். அடிமைத் தொழிலை விட்டு சொந்த தொழிலை தொடங்குவீர்கள். திருமணத் தடை, புத்திர சந்தான தடை நீங்கும். பகை விலகி உறவினர்களிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் ஒருவித அழுத்தத்தம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கடன் சுமை குறையும். குரு பார்வை 10 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில் அபிவிருத்தில் செய்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மார்பு, நெஞ்சு தொடர்பான பிரச்னைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+