குருப்பெயர்ச்சி: சிறு முயற்சி.. பெரு வெற்றி.. கடக ராசிக்கு குருவின் ஆசியால் மாற போகும் வாழ்க்கை
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கடகம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம் - ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக இருந்த உடல்நல பிரச்னைகள் தீரும். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மன அழுத்தம் குறையும். உறவு மற்றும் நட்பால் நல்ல ஆதாயம் உண்டு. வேற்று மொழி மனிதர்களாலும் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். வாகனங்களால் அணுகூலம் ஏற்படும்.
சுப விரயம்
சுப விரயம் இருக்கும். அதற்காக கடன் வாங்குவீர்கள். உத்யோகம் மற்றும்◌ தொழிலில் உயர்வு இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய சரியான காலம். நீண்ட காலமாக புதிததாக தொழில் தொடங்க நினைப்போருக்கு இது அற்புதமான காலம். சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து சிறப்பான பலன்களை தரப்போகிறார். ஆச்சர்யத்தக்க வகையில் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். சொத்துகள் சேரும்.
வளர்ச்சி
குருவால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும், சனி பகவானால் செல்வம் பெருகும். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக இருங்கள். உங்களின் சிறிய முயற்சி கூட பெரியளவுக்கு பலன்களை கொடுக்கும். குறுகிய காலத்திலேயே பெரு நிறுவனங்களுடன் போட்டி போடுமளவுக்கு வளர்ச்சி இருக்கும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். பெயர், புகழ் அதிகரிக்கும். முதலீடுக்கு பல்வேறு இடங்களில் இருந்து உதவி கிடைக்கும்.
எச்சரிக்கை
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனம் தேவை. முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் கேது வருவதால் வார்த்தைகளில் கவனம் தேவை. டிசம்பர் மாதம் வரை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முதுகு தண்டுவடம், வயிறு கால் பாதம் ஆகியவற்றில் அதிக கவனம் தேவை. குழப்பங்கள் இருக்கும். மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கடகம் ராசியினர் ஆலங்குடி குரு பகவான் கோயில் சென்று வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மதியம் ஒருவருக்காவது ஏதாவது ஒரு உணவு, எலுமிச்சை ஊறுகாய் அன்னதானம் செய்வதால் வீண் விரயம் தவிர்க்கப்படும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications