குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு அடியோடு மாறும் வாழ்க்கை.. குருவின் அருளால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம் - கும்பத்துக்கு ஜென்மத்தில் சனி விலகிறது. அதேநேரத்தில் ஜென்ம ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார். ஏழாம் இடத்துக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாகி சூப்பர் டூப்பர் பலன்களை கொடுக்கும். பூர்விக சொத்தில் அணுகூலம் ஏற்படும். பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
ஏற்றம்
பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் உண்டு. தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி புரிதல் அதிகரிக்கும். குரு பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் சுப காரியங்கள் நிறைவேறும்.
சுப காரியம்
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இருந்த சுப காரிய தடைகளும் நீங்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம், நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்கி சொத்துகளை சேர்ப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
அரசு வேலை
ஆன்மிகம் சார்ந்த பயணங்களால் மனம் நிம்மதி அடையும். அரசு வேலைக்கு முயற்சி செய்து வருவோருக்கு இந்த காலத்தில் அரசு வேலை கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பதில்கள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் அடுத்தடுத்து பலன்களை அனுபவிக்க போகிறீர்கள்.
ஆரோக்கியம்
குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். அந்நியர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப சமாச்சாரங்களில் நீங்களும் தலையிடக் கூடாது. வயிறு, முதுகு தண்டு வடம், ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. குழந்தைகளிடம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.
குழந்தை
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாகவும் உரிய ஆறுதலை வழங்க வேண்டும். அதனால் அபிராமி அந்தாதி அதிகம் படிக்க படிக்க குழந்தைகளின் கஷ்டங்கள் நீங்கும்.
கும்ப ராசியினர் சந்திரன் சம்பந்தப்பட்ட கோயில் சென்று தரிசனம் வேண்டும். அதேபோல குல தெய்வ கோயில் சென்று வழிபடுவது நன்மைகளை கொடுக்கும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications