குருவின் அருள் பெறும் மிதுன ராசி.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?.. குருப்பெயர்ச்சி பலன் முழு விவரம்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ரத்த அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, இதயப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செல்வது நல்லது. ஜென்ம குரு என்பதால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். பெற்றோருக்கும் நல்லது நடக்கும்.
பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பூர்வீக சொத்து, ரத்த பந்த உறவு பிரச்சனை, தாய் தந்தை பிரச்சனை அனைத்தும் தீரும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். செல்வாக்குகள் கூடும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிஅற்புதம் உண்டாகும்.
முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில், வியாபாரம் ரீதியான நல்ல முன்னேற்றம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். தைரியம் ஏற்படும். தெய்வ காரியங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். கோயில் கட்டுவது, ஆசிரமத்துக்கு செல்வது, திருப்பணிகள் செய்வீர்கள். குருமார்கள் ஆசிர்வாதம் உண்டாகும்.
மனதில் புதுவித தெம்பு ஏற்படும். உடற்பயிற்சியை கடைப்பிடிப்பது நல்லது. ரத்தத்தில் பரவக்கூடிய நோய் உண்டாகும். அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். எல்லா விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள். ஆனால், தேக ஆரோக்கியத்தில் தான் உங்களுக்குப் பிரச்சனை ஏற்படும். அடுத்த ஒரு வருட காலம் அருமையான காலகட்டமாக இருக்கும். பூர்வ புண்ணிய தோஷம், பிதுர் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
உங்களுடைய வளர்ப்பு பிராணிகள் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, வியாபாரம், தொழில், வேலை அனைத்திலும் நல்ல முன்னேற்றம், அனுகூலம் ஏற்படும். சுபகாரியம் உண்டாகும். ஆத்ம ரீதியான அனுகூலம் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications