Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2022: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் நிகழ்த்தப்போகும் குரு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த 4 மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் நவம்பர் 24 முதல் ஏப்ரல் இறுதி வரை மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் இந்த பயணத்தாலும் குரு பகவான் பார்வையாலும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள். வக்ர நிலை முடிந்து நேர் கதியில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் யாருடைய தலைவிதியை மாற்றப்போகிறார் யாருக்கெல்லாம் பொற்காலமாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..குரு 12ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். 154 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். சுப விரையம் அதிகம் ஏற்படும். கடன் வாங்கியாவது வீடு வாங்கி விட வேண்டும். ராகு பகவான் வீடு கட்டும் முயற்சிக்கு வெற்றியைத் தருவார். காரணம் குரு பகவான் உங்கள் ராசிக்கு வந்து ராகு உடன் அமரப்போகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். மன நிறைவும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஜனவரி மாதத்திற்குப் பிறகு குழந்தைகள் நலனின் அக்கறை காட்டுவது அவசியம். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். குருவின் பார்வை 4,6,8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும். நிம்மதி வீடு தேடி வரும். வாழ்க்கைத்துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வெற்றிகள் தேடி வரும். தலைவிதி மீறி வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆலய தரிசனம் செல்வீர்கள். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் பொருளாதார நிலைமை உயர்வடையப்போகிறது. செய்யும் முதலீடுகளில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். புரமோனுடன் சம்பள உயர்வு ஏற்படும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமணம் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிக்கல் எல்லாம் நீங்கப்போகிறது. குரு பகவான் வாரி வழங்கப்போகிறார். புதிய முயற்சிகள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரப்போகிறது. குழந்தை பாக்கியம் கைகூடும் பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியங்கள் நடைபெறும். குரு பார்வையால் தொழில் வியாபார பார்ட்னர்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். காதல் திருமணம் கை கூடி வரப்போகிறது. இளைய சகோதரர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. ஆணவம், அகம்பாவத்தை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பண வருமானம் அதிகரிக்கும். மறைமுகமான வருமானம் வழிகளை விட்டு விடுங்கள். நேர்மையான வழியில் நடைபோடுங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்கு குரு பகவான் 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அருளோடு குல தெய்வத்தின் அருளும் கிடைக்கப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரைப்போகிறது. பண வருமானமும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. குரு பலன் வந்து விட்டதால் காதலிப்பவர்களுக்கு நல்ல காலம். கல்யாண பேச்சு வெற்றிகரமாக முடிவுக்கு வரப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு நேர்கதியில் பயணிக்கும் காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+