Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன்: 2023 புத்தாண்டில் அதிர்ஷ்ட தேவதையின் அருளால் யாருக்கு பதவிகள் தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் தேடி வரும். சாமானியர்கள் கூட சில நேரங்களில் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். கிரகங்களின் இடமாற்றம் சிலரை செல்வாக்குள்ள நபர்களாக மாற்றும். அதிர்ஷ்ட தேவதையின் அருளினால் உயர் பதவிகள் தேடி வரும். 2023ஆம் ஆண்டு குரு பகவானால் யாரெல்லாம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குருவின் அருள் இருந்தால் செல்வம் செல்வாக்கு தேடி வரும். நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குரு விரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளையம் போன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள். குரு பகவான் பார்வை கோடீஸ்வர யோகத்தை அளிக்கும்.

காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வர வாய்ப்பு இல்லை. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.

குருவினால் ஏற்படும் நன்மைகள்

குருவினால் ஏற்படும் நன்மைகள்

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

குரு பார்வையால் நன்மை

குரு பார்வையால் நன்மை

குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடுவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள். குரு தசை 16 வருடங்கள் கொண்டது. குரு தசை ஒருவருக்கு நடக்கும் போது 16 ஆண்டுகள் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நல்லது கெட்டதை நடத்தி வைப்பார் குரு பகவான். ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும் பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே. வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே. 2023 ஆம் ஆண்டில் குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. 2023ஆம் ஆண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களும் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள்.

 சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் கடந்த ஓராண்டு காலமாக அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். தடைகள் அதிகம் ஏற்பட்டிருக்கும். இனி தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. 2023ஆம் ஆண்டு மேஷ ராசியில் அமரப்போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போவதால் சுபங்கள் அதிகம் நடைபெறும் காலம். ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடந்த ஓராண்டு காலமாக கடன்கள் நோய்களை அளித்து வந்த குரு இனி நோய்களை தீர்க்கப்போகிறார். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார்.

குபேர யோகம் தேடி வரும்

குபேர யோகம் தேடி வரும்

குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு திருமணம் நடைபெறும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். குரு பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையை கொடுப்பார்.

துலாம்

துலாம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். ஏழாம் வீட்டில் குருவும் ராகுவும் இணைந்திருப்பதால் குடும்பத்தில் கவனம் தேவை. காதல், திருமணம் தொழில் பார்ட்டனர்களிடம் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருப்பது அவசியம். குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை ராசிக்கு மூன்றாமிடத்தில் பதிகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். சந்தோசங்களையும் ஆதவுகளையும் கொடுப்பார்கள். 11ஆம் இடமான சிம்ம ராசியில் பதிவதால் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். அரசியல் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நன்மையை தரும். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு உற்சாகத்தை தரும். பயணங்கள் செய்பவர்களுக்கு நன்மை நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும்.

 தனுசு புண்ணியம் நிறைந்த ஆண்டு

தனுசு புண்ணியம் நிறைந்த ஆண்டு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. ஏழரை சனியும் விலகப்போகிறது. குருவும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குரு உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்க ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேறும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது. ராகு உடன் ஐந்தாம் வீட்டில் குரு இணைவது ராஜயோகம். வேலையில் உற்சாகத்தையும் உயரதிகாரிகளின் ஆதரவையும் குரு பெற்றுத்தருவார். குரு உங்க லாப ஸ்தானத்தை பார்க்கும் போது வருமானத்தில் லாபத்தை தருவார் நல்ல ஆளுமைத்தன்மையை தருவார். பாக்ய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். புகழும் கீர்த்தியும் தேடி வரும். அப்பாவினால் சொத்துக்கள் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+